பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் கடந்த 3 ஆம் தேதி மாலை கோலாகலமாக துவங்கியது. கடந்த சீசனில் இந்த சீசனில் பல்வேறு மாற்றங்களை புகுத்தி இருக்கின்றனர்.
தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் முதன் முறையாக இந்த சீசனில் முதல் திருநங்கையாக நமிதா மாரிமுத்து என்ற ஒரு திருநங்கை போட்டியாளரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
பொதுவாக பிக் பாஸ் சீசன் என்றால் பெண் போட்டியாளர்களை விட ஆண் போட்டியாளர்கள் தான் அதிகம் இருப்பார்கள் ஆனால் இந்த சீசனில் பெண் போட்டியாளர்கள் தான் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார்கள்.
பொதுவாக முதல் நாளில் 15 அல்லது 16 போட்டியாளர்களை தான் அறிமுகம் செய்வார்கள். ஆனால், இந்த சீசனில் முதல் நாளே 18 போட்டியாளர்களை களமிறக்கிவிட்டுள்ளனர்.
நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டின் கேப்டன்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் இரண்டாம் ப்ரோமோவில் எதோ டாஸ்க் நடந்தது போல இருக்கிறது. இதில் ராஜு டிஸ் லைக் கொடுத்துள்ளார்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.