Save 20% off! Join our newsletter and get 20% off right away!

தாமரையிடம் தரக்குறைவாக தகராறு செய்யும் இசைவாணி.. தொடரும் மோதல் !

யாரு யாருக்கு எல்லாம் பிரச்சினை உள்ளதோ அவர்களுக்கு இடையே டாஸ்க் என்ற பெயரில் சண்டையை மூட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதே பிக் பாஸின் வேலையாக உள்ளது.

பிக் பாஸும் என்னத்தான் பண்ணுவாரு பாவம், கண்டெண்ட் வரும்… கண்டெணட் வரும்னு வெயிட் பண்ணி கடைசியில் எதுவும் வராததால் வீட்டுக்குள் நாரதர் வேலையை தொடங்கி இருக்கிறார் பிக்பாஸ்

பிக் பாஸ் உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி டாஸ்கில், இசைவாணியின் கண்ணாடியாக இருந்த தாமரை, நீ பல நேரம் அறிவு இல்லாதமாதிரி இருக்க என்றும், அடுத்தவங்க பேசவிடு அவங்க பேசுவதை கேளு என்றார். இதையடுத்து தாமரை ஏதோ பாட்டுப்பாட என்ன கடுப்பான இசைவாணி என்ன நக்கல பாட்டுப்பாடுற என்று கேட்டு வம்பு இழுத்தார்.

இன்றைய எபிசோடில், தாமரையை பார்க்காமல் முகத்தை திருப்பிக்கொண்டே இருந்தார் இசைவாணி, தாமரை இசைவாணியின் கண்ணாடி என்பதால் அவர் போகும் இடம் எல்லாம் அவரும் சென்றார். இதையடுத்து, நிரூப்பிடம் ஒரு பேஜ்ஜூக்காக இப்படி எல்லாம் விளையாடனும்னு அவசியம் இல்ல என்றார்.

இதையடுத்து, உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடியில் அதிக பேஜ்களை பெற, என் கேள்விக்கு என்ன பதில் டாஸ்க் நடைபெற்றது. இதில் 5 கேள்வி கேட்கப்படும், தவறாக பதில் அளித்தால் எதிரணியின் தலையில் முட்டையை உடைக்க வேண்டும்.

இந்த டாஸ்கில் இசைவாணியிடம் 5 கேள்விகளை கேட்டார் பிக் பாஸ் இதில் 2 கேள்விக்கு அவர் சரியாக பதில் அளித்து 2 மதிப்பெண்களை பெற்றார். மேலும், 3 கேள்விக்கு தவறாக பதில் அளித்ததால், தாமரையின் தலையில் முட்டையை உடைத்தார்.

இதையடுத்து, தாமரையிடம் 5 கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் பிரியங்காவின் தம்பி பெயர் என்ன என்ற கேள்விக்கு மட்டும் சரியான பதில் அளித்தார். மற்ற 4 கேள்விக்கும் தவறாக பதில் அளித்ததால் இசைவாணியின் தலையில் முட்டையை உடைத்தார். தாமரை முட்டையை உடைக்கும் போது என்ன வேணும்னு பண்றியா, ஒழுங்கா உட என கூறி, தரக்குறைவாக சண்டை போட சந்தர்ப்பந்தை எதிர்பார்த்து காத்து இருக்கிறார் இசைவாணி.

இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் இசைவாணி, ஏற்கனவே டேஞ்சர் ஜோனில் இருக்கிறார். அவர் பேசும் முறையும் நடந்து கொள்ளும் முறையும் கொஞ்சம் கூட சரி இல்லை என்று நெட்டிசன்ஸ்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. இதனால் அவர் இந்த வாரம் வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கு என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.