Malayagam
Home » காதலன் மீது பொய் புகார்.‌. ஜூலியின் காதலனால் அம்பலமான உண்மைகள்!

காதலன் மீது பொய் புகார்.‌. ஜூலியின் காதலனால் அம்பலமான உண்மைகள்!

தமிழகத்தில் மெரினா கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. அதன் பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் பங்கேற்று தன்னுடைய பெயரை மொத்தமாக கெடுத்துக் கொண்டார்.

இருப்பினும் இதை எல்லாம் பொருட்படுத்தாமல் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று அண்ணாநகர் காவல் நிலையத்தில் தன்னுடைய காதலன் மீது புகார் அளித்திருந்தார்.

தமிழ் திருமணம் செய்து கொள்வதாக கூறி பல்சர் பைக், தங்கச் செயின் உள்ளிட்டவைகளை வாங்கிக் கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாக கூறியிருந்தார்.

இதனையடுத்து ஜூலியின் காதலர் மணிஷ் என்பவரை போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜூலி ஏற்கனவே ஒருவருடன் காதலில் இருந்து வந்த நிலையில் அந்த காதல் முறிந்த பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியதாக மணிஷ் தெரிவித்துள்ளார். மேலும் ஜூலி தற்போது வேறு ஒருவருடன் காதலில் இருந்து வருவதால் என் மீது பொய் புகார் அளித்துள்ளார் என கூறியுள்ளார்.

இதற்கான ஆதாரங்களையும் அவர் சமர்ப்பித்துள்ளார். மேலும் புதிய காதலன் தன்னை விலகிக்கொள்ளுமாறு ஜூலி சொல்ல அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததால் தன்னை மிரட்டுவதற்காக போலீசில் புகார் அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ஜூலியிடமிருந்து பெற்ற தங்கச் செயின் மற்றும் பல்சர் பைக் உள்ளிட்டவைகளை போலீசார் முன்னிலையில் அவரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதன் மூலம் ஜூலி தன்னுடைய முன்னாள் காதலரை கழட்டி விட போலீசில் பொய் புகார் அளித்திருப்பது அம்பலமாகியுள்ளது. இதனால் நெட்டிசன்கள் பலரும் ஜூலியை திட்டி தீர்த்து வருகின்றனர். ‌‌ ‌‌

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed