Mon, Dec5, 2022

#Trending

பிக் பாஸ் 14 வது நாள் : ஸ்ட்ராட்டஜி.. குரூப்பிசம்.. எலிமினேஷன்.. பிக் பாஸ் அலப்பறை ஒரு பார்வை !

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 14வது நாளான நேற்று மலேசிய மாடல் அழகி நாடியா சாங் எலிமினேட் செய்யப்பட்டார்.

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி 18 பேருடன் தொடங்கப்பட்டது. இதில் நமீதா மாரிமுத்து வெளியேறியதை அடுத்து 17 போட்டியாளர்கள் இருந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழக்கமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் கமல்ஹாசன் போட்டியாளர்களுடன் கலந்துரையாடுவார்.

மொத்தம் 15 போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருந்த நிலையில் சனிக்கிழமை பத்து பேர் காப்பாற்றப்பட்டதாக கமல் அறிவித்தார்.மீதமிருக்கும் 5 நபர்களில் ஒருவர் கண்டிப்பாக வெளியேற்றப்படுவார் என கமல் அறிவித்து இருக்கிறார்.

இதனால் நேற்றைய எபிசோடை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். இதில், கமல் வந்தவுடன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருவதாக கூறினார்.

மேலும், அரசல் புரசலாக ஸ்ட்ராட்டஜியை பற்றியெல்லாம் பேசிக்கிறாங்களே சிலர், என கமல் ஆரம்பிக்க யாரெல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பீர்கள் என்கிற கேள்வியையும் போட்டியாளர்களிடம் கேட்டார் கமல்.

இதையடுத்து பேசிய இமான் அண்ணாச்சி நான் ஷூட்டிங் இருந்ததால் அவ்வளவாக பார்த்து இல்லை என்றார். அதேபோல தாமரையும் நான் இந்த நிகழ்ச்சிக்கு வருவது உறுதியான பிறகே செல்போனில் பார்த்தேன் என்றார். அதேபோல அபிஷேக்கும் இந்த நிகழ்ச்சியை பார்த்து இல்லை என்றார்.

ஸ்ட்ராட்டஜி… ஸ்ட்ராட்டஜினு சொல்றீங்க என்ன ஸ்ட்ராட்டஜினு கமல் கேட்டார் இதற்கு, ஐக்கி பெர்ரி மற்றும் பாவனி ரெட்டி எழுந்து நின்று ஸ்ட்ராட்டஜியும் குரூபிசமும் ஆரம்பமாகி வருகிறது என்பதை ஓப்பனாகவே சொல்லி விட்டனர்.

ஸ்ட்ராட்டஜி பற்றி பேசாமல் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் அரசியல் குறித்து இமான் அண்ணாச்சியிடம் கமல் கேட்க, இது வரைக்கும் குரூப்பா பேசுறாங்க சார்.. ஆனால், வர திங்கட் கிழமையே குரூப்பிசம் ஆரம்பிச்சிரும் என்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரங்களில் சிறப்பாக செயல்பட்ட போட்டியாளர் மற்றும் கூட்டத்தில் காணாமல் போன இரண்டு போட்டியாளர்கள் பற்றி கருத்துக்கணிப்பு செய்து முடிவு அறிவிக்கப்பட்டது.
இதில் நாடியா மற்றும் சின்னப்பொண்ணு சிறப்பாக செயல்படாதவர்களாக தேர்வுக்குழுவால் அறிவிக்கப்பட்டது. மேலும் , சிறப்பாக வீட்டில் ஜொலித்தவராக இமான் அண்ணாச்சி தேர்வு செய்யப்பட்டார்.

காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது குறித்து பேசிய சின்னப்பொண்ணு, என் கிட்ட யாரும் சரியாக பேசுவது இல்லை, நான் போனாலே பேச்சை நிறுத்திவிடுகிறார்கள் அது எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது என்றார். அதேபோல, நாடியாவும் நான் காணாமல் போயிட்டேனு சொல்றாங்கா… ஆனால், எனக்கு நான் காணாமல் போகவில்லை என்று தோன்றுகிறது என்றார்.

இறுதியாக எலிமினேஷன் விஷயத்திற்கு வந்த, கமல்ஹாசன், சின்னப்பொண்ணு, மதுமிதா, வருண் ஆகியோரை ‘ஷேஃப்‘ என்று அறிவித்தார், கடைசி வரை நாடியா மற்றும் அபிஷேக் குறித்து எதுவும் சொல்லவில்லை. ஒரு விதமான பதற்றத்தை கொடுத்துக்கொண்டு இருந்தார். பிரியாங்கா ஒரு கட்டத்தில் சார்… சீக்கிரம் சொல்லுங்க சார் முடியல என்று கூறிவிட்டார். கடைசியா நாடியாவின் பெயரை அறிவித்தார் கமல்.

இதையடுத்து, டிக் டாக் பிரபலமான மலேசிய போட்டியாளர் நாடியா சாங் பிக் பாஸ் சீசன் 5 ன் முதல் நபராக வெளியேற்றப்பட்டார். நாடியா சங் ஸ்ட்ராங் போட்டியாளர் என்று கூறி அனைவரும் பாராட்டி அவரை வழியனுப்பி வைத்தனர்.

இதையடுத்து கமலிடம் பேசிய நாடியா, என் வலிகளை வெற்றிக்கான பாதையாக அமைத்து கொள்ளவேண்டும் என்று நினைத்து இருந்தேன். இந்த வீட்டைப்பற்றிய புரிதலே எனக்கு இப்போதுதான் வந்தது, ரொம்ப விரைவாகவே இந்த வீட்டை விட்டு நான் வெளியேறுகிறேன் என்று கூறினார். இதையும் கடந்து போவேன் என்று அழகாக தெளிவாக பேசி விடைபெற்றார் நாடியா சாங்.

குரூப்பிஷம் குறித்து பாவ்னி மற்றும் அபிஷேக் , மதுமிதா, அபினய் ஆகியோர் ஒன்றாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள் அப்போது அங்கு வரும் அபிஷேக் குரூப்… குரூப்னு சொல்லாதே… நீயும் வா எல்லாம் ஒரு டீமா செயல்படுவோம் என்று கூறினார்.

அது எப்படி நியாயம் ஆகும்… இது சரி இல்லை என்கிறார் பாவ்னி.. இதற்கு அபிஷேக், மதுமிதாவை எனக்கு பிடிக்கும் இந்த வாரம் அவரை தலைவராக்க நான் அனைவர் கிட்டயும் பேசி முயற்சியை செய்வேன் என்று தொடையில் தட்டி கூறினார்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#Celebrities