டாய்லெட்டுக்கு கூட ரெட் கார்ப்பெட்டா? அலேக்காக தூக்கப்பட்ட முத்து

பிக்பாஸ் தமிழ்  அப்டேட்

பிக்பாஸ் தமிழ்  அப்டேட் / Bigg Boss Tamil 6 Daily Updates: பிக்பாஸ் தமிழ் சீசன் 6 இன் முதல் நாள் கலகலப்பான சென்ற நிலையில் இன்று இரண்டாவது நாளும் அதே கலகலப்புடன் தொடங்குகிறது.

இன்றைய முதல் புரமோவில் பிக்பாஸ், போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார். நான்கு அணிகளும் தங்கள் அணியை சிறந்த அணியாக மாற்ற வேண்டும் என்பதே பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் ஆகும்.

சிறந்த அணியாவதற்கு இன்னொரு அணியின் போட்டியாளர்கள் சாப்பாட்டை ஊட்டிவிட வேண்டும் என்று கேட்டால் ஊட்டிவிட வேண்டும். அதேபோல் பாத்ரூம் செல்ல வேண்டும் என்று கூறினால் கூட ரெட் கார்ப்பேட் மரியாதையுடன் பாத்ரூமுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

அலேக்காக தூக்கப்பட்ட ஜி.பி.முத்து

அலேக்காக தூக்கப்பட்ட ஜி.பி.முத்து

இதனை அடுத்து சில போட்டியாளர்கள் ஊட்டி விடுகின்றனர். இந்த நிலையில் ஜிபி முத்து பாத்ரூம் செல்ல வேண்டும் என்று கூறியவுடன் அவரை அப்படியே அலேக்காக தூக்கிய சக போட்டியாளர்கள் அவரை ரெட் கார்பெட் மரியாதையுடன் பாத்ரூம் அழைத்து செல்லும் காட்சிகள் உள்ளன.

Bigg Boss Tamil 6 Today Promo Video: