முந்தைய சீசன்களை போல இல்லாமல் இந்த முறை பிக் பாஸில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை 18 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டு இருக்கின்றனர்.
மேலும் ஒளிபரப்பு நேரமும் 10 மணிக்கு என மாற்றப்பட்டு இருப்பதும் ரசிகர்களுக்கு அதிருப்தியை தான் கொடுத்திருக்கிறது.
இதெல்லாம் ஒருபுறமிருக்க பிக் பாஸ் தொடங்கிய முதல் நாளிலேயே ரசிகர்கள் ஆர்மி தொடங்கி விட்டார்கள். பிக் பாஸ் முதல் சீசனில் ஓவியா பற்றி நன்கு தெரிந்த பிறகு தான் அவருக்கு ஆர்மி தொடங்கினார்கள், ஆனால் தற்போது இந்த முறை சீரியல் நடிகை பாவனி ரெட்டிக்கு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த உடனேயே ஆர்மி தொடங்கப்பட்டிருக்கிறது.
பிக் பாஸ் துவக்க நிகழ்ச்சியில் வந்த வீடியோவில் பாவனி ரெட்டி எமோஷ்னலாக அவரது கணவர் தற்கொலை செய்துகொண்டது பற்றி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
“ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் மற்றொருவரை தான் குறை சொல்வார்கள், ஆனால் என்ன நடந்தது என யாரும் யோசித்துப் பார்ப்பதில்லை” என கூறியிருந்தார்.
மேலும் தான் பிக் பாஸ் வருவதே தன்னை பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் எனவும், மற்ற ஷோக்களில் நான் எப்போதும் reserved ஆக தான் இருப்பேன், ஆனால் இந்த முறை பிக் பாஸில் வெளிப்படையாக இருக்க போகிறேன் என கூறியிருந்தார் பாவனி ரெட்டி.
பாவனி ஆர்மி தொடங்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் அதிக அளவு பகிரப்பட்டு வருகிறது.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.