பிக் பாஸ் வீட்டின் 31வது நாளான நேற்று சினிமா சினிமா என்ற டாக்ஸ் கொடுக்கப்பட்டது. அதில் போட்டியாளர்களுக்கு தனித்தனியாக கதாபாத்திரம் கொடுக்கப்படும். டாஸ்க் தொடங்கியதும் போட்டியாளர்கள் அந்த கதாபாத்திரமாக மாறிவிட்டனர்.
லிவ்விங் ஏரியாவில் நடைபெற்ற இந்த டாஸ்கில் கதாபாத்திரத்திற்கான பாடல் ப்ளே ஆனவுடன் போட்டியாளர்கள் எங்கிருந்தாலும் வந்து அந்த மேடையில் நடனமான வேண்டும் என்பதே டாஸ்க்.
இதில் முதலாவதாக வந்த பாடலுக்கு அனைத்து ஹவுஸ் மெட்டுகளும் ஆட்டமா ஆடி தீர்த்தனர். ஒவ்வொருத்தரின் கதாபாத்திரத்தின் உடையும், பாடலும் ஒன்னுமே புரியல, சந்தானம் படத்தில், வரும் காமெடி சீன் போல, டேய் மச்சான் உள்ள நிறைய பைத்தியங்க இருக்குடானு சொல்லத் தோன்றியது.
சினிமா சினிமா டாஸ்கில் ஒரு சிலரின் கதாபாத்திரம் அவர்களுக்கு பொருத்தமாக இருந்தது. அதில் குறிப்பாக பிரியங்கா வடிவேலுவின் நேசமணி கதாபாத்திரத்தை போட்டு இருந்தார் அது அவருக்கு பக்காவாக பொருந்தி இருந்தது.
அதேபோல ராஜு,எம்.ஆர்.ராதா கெட்டப்பை போட்டு இருந்தார். ஏற்கனவே மிமிக்கிரியில் கலக்கும் ராஜுவுக்கு இந்த டாஸ்க் தூசி மாதிரி சும்மா அப்படியே ஊதி தள்ளிட்டாரு அவருக்கு அந்த ரோல் பொருத்தமாக இருந்தது.
அடுத்ததாக, நிரூப் அன்னியன் திரைப்படத்தில் வரும் அம்பி கெட்டப்பை போட்டு இருந்தார். இதற்காக அவர் தனது மீசையை எடுத்து விட்டு அம்பி போல வந்தார். திடீரென அன்னியனாக மாறியும் வீட்டில் இருந்தவர்களை மிரட்டினார்.
சிபிக்கு படையப்பா கதாபாத்திரமும், அக்ஷராவுக்கு படையப்பா திரைப்படத்தில் வரும் நீலாம்பரி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. படையப்பாவாக மாறிய சிபி, ஓரளவுக்கு மேனேஜ் செய்து நடித்து விட்டார். ஆனால், அக்ஷராவுக்கு நீலாம்பரி கதாபாத்திரம் ஒட்டவில்லை.
பவானிக்கு கஜினி திரைப்படத்தில் வரும் சூர்யாவின் கெட்டப்பும், இசைவாணிக்கு சந்திரமுகி ஜோதிகா கதாபாத்திரமும், மதுமிதாவுக்கு 23ம் புலிகேசி படத்தில் வரும் வடிவேலுவின் கதாபாத்திரும், தாமரைச்செல்விக்கு கோவை சரளா ரோலும் கொடுக்கப்பட்டது. பார்ப்பதற்கு என்னடா என்று தோன்றிலும், சில காட்சிகள் சிரிக்க வைப்பது போல இருந்தன.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.
Leave a Reply
View Comments