HomeசினிமாBiggBossபிரியங்காவுக்கு பிக்பாஸ் கொடுத்த வார்னிங்.. இந்தளவுக்கு பொறாமையா இருக்காங்களே!

பிரியங்காவுக்கு பிக்பாஸ் கொடுத்த வார்னிங்.. இந்தளவுக்கு பொறாமையா இருக்காங்களே!

செட் பிராப்பர்டி விருதை கொடுக்க சுமார் 7 நிமிடங்களுக்கு மேலாக எடுத்துக் கொண்டார் பிரியங்கா என பிக் பாஸ் எடிட்டர் அவரையே செட் பிராப்பர்டி என சொல்லாமல் டைமை போட்டு காட்டி விட்டார்.

நிரூப்புக்கு கிடைத்திருக்கும் புதிய பார்ட்னராக ஐக்கி பெர்ரி மீது அதீத கோபத்தில் இருக்கும் பிரியங்கா அவருக்கு போய் செட் பிராப்பர்டி விருதை கொடுத்ததை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளாமல் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

மேலும், இந்த வீட்டில் மதுமிதா மட்டும் தான் அப்படி இருக்கிறார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ராஜு ஜெயமோகன் எதையும் முகத்துக்கு நேராக சொல்லாமல் மறைமுகமாக மற்றவர்கள் மனம் புண்படும்படாதபடி சொல்லி சேஃப் கேம் ஆடுகிறார் என சொன்ன பிரியங்கா செட் பிராப்பர்டி விருதை கொடுக்க ஏன் அவ்வளவு நேரம் சீன் போட்டாங்க என்றே நெட்டிசன்கள் அவரை கண்டபடி விளாசி வருகின்றனர்.

- Advertisement -

பிரியங்கா இந்த வீட்டில் அப்படி யாருமே செட் பிராப்பர்டி போல இல்லை என ரொம்ப நேரம் அதனை சொல்ல எடுத்துக் கொண்ட நேரத்தை பிக் பாஸ் எடிட்டர் டைம் போட்டு 7 நிமிஷத்திற்கு மேல் எடுத்துக் கொண்டார் என்பதை காண்பித்து எந்தளவுக்கு பங்கம் பண்ண முடியுமோ அந்த அளவுக்கு பங்கம் செய்து விட்டார். விஜய் டிவி தொகுப்பாளினியையே இப்படி கலாய்க்க ஒரு தில் வேண்டும் தான்.

ராஜுவுக்கு கொடுத்த மிக்சர் டைட்டிலை அப்படியே இந்தம்மா கழுத்தில் போடுங்கப்பா என சொல்லாத குறையாக அப்படியெல்லாம் நீங்க சேஃப் கேம் ஆட முடியாது. உங்களுக்கு பிக் பாஸ் பத்தி தெரியும்ல ஒழுங்கா யாராவது ஒருத்தருக்கு அந்த விருதை கொடுங்க என வார்ன் பண்ணி விட்டார்.

நிரூப் பிரியங்காவை கழட்டி விட்டு ஐக்கி பெர்ரி உடன் ஐக்கியமான நிலையில், பிரியங்காவுக்கு ஐக்கி மீது பொறாமை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகத்தான் பூசி மெழுகி கடைசியாக அந்த செட் பிராப்பர்டி விருதை ஐக்கி பெர்ரி தலையில் கட்டி விட்டார் பிரியங்கா.

இந்த வாரம் நிரூப்பை ஜெயிக்க வைக்க கடைசி வரை அப்படி ஓடிய ஐக்கிய பெர்ரி செட் பிராப்பர்டி, பிசிக்கல் டாஸ்க் என வந்தாலே முதல் ஆளாக அவுட் ஆகும் நீங்கள் சூப்பர் பிளேயரா பிரியங்கா என பிக் பாஸ் ரசிகர்கள் பிரியங்காவை வெளுத்து வாங்கி வருகின்றனர்.

மேலும், இப்போ இருக்கிறவங்கள்ல யாருமே செட் பிராப்பர்ட்டின்னு தெரியல.. இதற்கு முன் இருந்தவர்களில் ஒருத்தரை தனக்கு அப்படி தோன்றியிருக்கு என பிரியங்கா தேவையில்லாமல் பழைய கதையை கிளற நாடியா சங்கை சொல்றாரா? அல்லது சின்ன பொண்ணுவை சொல்றாரா பிரியங்கா என்றும் விவாதம் நடத்தி வருகின்றனர் ரசிகர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular