HomeசினிமாBiggBossவாத்தியாருக்கே கண்டிஷன் போட்ட பிரியங்கா... ஓவரோ ஓவர்!

வாத்தியாருக்கே கண்டிஷன் போட்ட பிரியங்கா… ஓவரோ ஓவர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக கனா காணும் காலங்கள் என பள்ளிக்கூட டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக பிக்பாஸ் வீடு போர்டிங் ஸ்கூலாக மாற்றப்பட்டது. இதில் ஆசிரியர்களாக அபிஷேக் ராஜா, ராஜு, அமீர் ஆகியோரும் வார்டனாக சிபியும் இருந்தனர்.

- Advertisement -

மற்ற அனைவரும் ஸ்டுடண்ட்டாக இருந்தனர். இதில் ஸ்டுடன்ட்டாக இருந்த பிரியங்கா அளவுக்கு அதிகமான சேட்டைகளை செய்தார்.
பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களிடம் இப்படி பேசுவார்களா என்று யோசிக்கும் அளவுக்கு இருந்தது அவரது நடவடிக்கை.

அவர் ஆசிரியர்களிடம் பேசிய விதமும் நடந்து கொண்ட விதமும் பார்க்கும் மாணவர்களை தவறாக வழி நடத்தும் வகையிலேயே இருந்தது.

- Advertisement -

ஆசிரியர்கள் சொல்வதை கேட்கவே கூடாது என்ற எண்ணத்தில் முழுக்க முழுக்க சேட்டைகளை செய்து, அடிக்கடி பனிஷ்மெண்ட் வாங்கினார்.

மேலும் வகுப்பறையை விட்டு வெளியேறி பாதி நேரம் கார்டன் ஏரியாவிலேயே இருந்தார். சினிமா பாடல்களை எழுதி தனது சேட்டையின் உச்சக்கட்டத்தை காட்டினார்.

அதற்காக வார்டன் கைகளில் டீ கப்பை வைத்துக் கொண்டு நிற்கும்படி தண்டனை கொடுத்தார். அப்போது டீ கப்பை அப்படியே கவிழ்த்து விட்டு என்னால் முடியாது என்றார்.

இதனை பார்க்கும் போது, நிகழ்ச்சியை பார்க்கும் மாணவர்களும் இதையே செய்தால் என்னவாகும் என்றே தோன்றியது.

பின்னர் வகுப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரியங்கா, கார்டன் ஏரியாவிலேயே இருந்தார். மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து விட்டு உள்ளே வருமாறு கூறினார் வார்டன்.

மன்னிப்பு கடிதம் எழுதி கொடுக்க வேண்டும் என்றால் ஆசிரியர்கள் குச்சியை வைத்திருக்க கூடாது என்று கண்டிஷன் போட்டார்.

மற்ற ஆசிரியர்களும் மாணவர்களும் பேசியும் தன்னால் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுக்க முடியாது என்று கூறினார்.

ஸ்டுடன்ட்டாக பிரியங்காவின் நடவடிக்கையை பார்த்த நெட்டிசன்கள், சேட்டைக்கு அர்த்தம் தெரியுமா? இப்படியெல்லாம் எந்த ஸ்டுடன்ட்ஸும் நடந்து கொள்ள மாட்டார்கள் என்று விளாசி வருகின்றனர்.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular