பிக்பாஸ் தமிழ் அப்டேட் / Bigg Boss Tamil 6 Daily Updates: பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று தொடங்கியது. அதில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கும் நிலையில் அதில் ஒரு சில போட்டியாளர்கள் முதல் நாளே பார்வையாளர்களை கவர்ந்துவிட்டனர்.
அந்த வகையில் ஜிபி முத்துவை அடுத்து பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தவர் ஜனனி என்று கூறலாம். இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணான இவர் மீடியா துறையில் சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் உள்ளவர்.
குறிப்பாக த்ரிஷாவின் தீவிர ரசிகை. சிறு வயதில் பள்ளியில் எல்லோரும் டாக்டர், என்ஜினீயர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்ட நிலையில்தான் த்ரிஷா ஆகவேண்டும் என்று வகுப்பிலேயே தைரியமாக கூறியவர்.
இதனை கமல் முன்னிலையில் ஜனனி கூறியபோது, த்ரிஷாவுக்கு ஒரு போட்டியாளர் வந்துவிட்டார் என கமல்ஹாசன் கூறினார்.
இந்த நிலையில் முதல் நாளிலேயே குட்டி த்ரிஷா ஜனனி சக போட்டியாளர்களால் டார்கெட் செய்யப்பட்டார். கிட்டத்தட்ட அனைவருமே அவரை நாமினேட் செய்தனர். இதனால் அவர் அடுத்த வாரம் நாமினேஷனில் நேரடியாக இடம்பெற்றுள்ளார்.
ஆனாலும் ஜனனி ஆர்மியினர் எங்கள் தலைவியை நாங்கள் காப்பாற்றுவோம் என்றும் அவரை டைட்டில் வின்னர் பட்டம் பெறும் வரை ஆதரிப்போம் என்றும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
முதல் நாளே ஜனனிக்கு ஆர்மி தொடங்கிவிட்ட நிலையில் கடந்த 3 வது சீசனில் இருந்த லாஸ்ஸியா போல் இவரும் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.