தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. கடந்த 2017-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி இதுவரை வெற்றிகரமாக 5 சீசன்கள் முடிந்துள்ளது.
இதுவரை முடிந்துள்ள 5 சீசன்களில் முதல் சீசனில் ஆரவ் டைட்டில் வின்னர் ஆனார். இதையடுத்து இரண்டாவது சீசனில் ரித்விதாவும், மூன்றாவது சீசனில் முகேன் ராவும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும் டைட்டில் வின்னர் ஆனதோடு ரூ.50 லட்சத்துக்கான காசோலையையும் வென்றனர்.
அக்டோபர் 2ம் தேதி சீசன் 6 தொடங்க இருப்பதாகவும், இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார் என்று தகவல் வெளியானது.
நிகழ்ச்சி தொடங்க இன்னும் 40 நாட்களே உள்ளதால் தற்போது அதில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே ரக்ஷன், ராஜலட்சுமி, கார்த்திக் குமார், அஜ்மல், ஸ்ரீநிதி ஆகியோரின் பெயர்கள் அடிபட்ட நிலையில், தற்போது மேலும் 2 நடிகைகள் குறித்த தகவல் லீக் ஆகி உள்ளது.
அதன்படி இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை பாடாய்படுத்தி வரும் நடிகைகள் தர்ஷா குப்தா மற்றும் ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.