Malayagam
Home » “காதலர் முன்னாடி அதுக்கு தயங்கிய இளம்பெண்… “கடைசி’ல அவங்களுக்கே ஆப்பா முடிஞ்சுடுச்சே”

“காதலர் முன்னாடி அதுக்கு தயங்கிய இளம்பெண்… “கடைசி’ல அவங்களுக்கே ஆப்பா முடிஞ்சுடுச்சே”

பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் விக்டோரியா டி ஃபெலிஸ். சுமார் 21 வயதாகும் இவர், சமூக வலைத்தளத்தில் மிக பிரபலமான Influencer-களில் ஒருவர் ஆவார். சுமார், 23 மில்லியன் பேர், விக்டோரியாவை இன்ஸ்டா கிராம் பக்கத்தில் பின்பற்றியும் வருகின்றனர்.

இந்நிலையில், தனது காதலருடன் இசை நிகழ்ச்சி ஒன்றில் விக்டோரியா கலந்து கொண்டுள்ள போது, திடீரென அவருக்கு தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு உடலில் வேதனை ஏற்பட்டுள்ளது.

மேலும், இதன் காரணமாக நெஞ்சு உள்ளிட்ட உடலின் மற்ற பகுதிகளில் இருந்தும், அதிக வேதனை அவருக்கு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல், விக்டோரியா சற்று அவதிப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து, மருத்துவமனை ஒன்றில் அவர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே போல, வீல் சேர் ஒன்றில் தான் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் இணையத்தில் விக்டோரியா பகிர்ந்திருந்தார். இதனையடுத்து, அந்த பெண்ணிற்கு திடீரென வேதனை ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது பின்னர் தெரிய வந்திருக்கிறது.

அதாவது, தனது காதலன் முன்பு வைத்து ஆசன வாய் வழியே வாயு வெளியேற்ற, விக்டோரியா தயங்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அதனை அடக்கிய படி, நிறைய நேரம் தனது வாயுவை கட்டுப்படுத்தவே, அதுவே அவருக்கு விபரீதம் ஆகவும் அமைந்து, பின்னர் உடல் முழுவதும் வேதனை தொடங்கி, மருத்துவமனை வரை சென்று சேர்த்துள்ளது.

பொதுவாக, ஆசன வாய் வழி வாயு என்பது அனைவரது உடலில் இருந்தும் வெளியேறுவது தான். அப்படி வெளியேறுவதை சிலர் சற்று அருவருக்க விஷயமாக கண்டாலும், அதனை வெளியேற்றி அவமானம் கொள்ள வேண்டாம் என கருதும் போது, இது போன்று சில அசம்பாவிதங்கள் கூட நிகழலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed