வினோத காரணங்களுக்காக எத்தனையோ கல்யாணங்கள் தாலி கட்டுவதற்கு கடைசி நிமிடங்களில் நின்றுபோய்விடுகின்றன. மணப்பெண்கள் தங்கள் கல்யாணத்தையே நிறுத்திய சம்பவங்களும் சமீப காலமாக அரங்கேறி வருகின்றன.
பெரும்பாலும், வரதட்சணை பிரச்சனைகள் ஏதாவது வெடித்துவிடும்.. அல்லது சம்பந்தப்பட்ட ஆணோ, பெண்ணோ, இருவரில் யாராவது ஒருவர் காதல் விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருப்பார்கள். இதனாலும் திருமணங்கள் நின்றுவிடுவது உண்டு.
இதோ இப்போது ஒரு திருமணம் பிரிட்டன் நாட்டில் நடந்துள்ளது. ஆனால், இதுவரை இப்படி ஒரு விஷயத்தை யாருமே கேள்விப்பட்டிருக்க முடியாது. அவர் பெயர் ஜார்ஜ் மிட்சல். இவர் ஒரு மேரேஜ் புரோக்கர் ஆவார்.
திருமண விழாக்களை ஏற்பாடு செய்து அதை நடத்தியும் தருபவர். இவரிடம் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக வேலை பார்ப்பவர் ஜென்னி. ஒரு கல்யாணத்துக்கு மாப்பிள்ளைக்கு மேக்கப் போடுவதற்காக ஜென்னி போனாராம். மணமகனுக்கு மேக்கப்பும் போட்டு முடித்துள்ளார். திருமணத்துக்கு இன்னும் சில நிமிடங்களே உள்ள நிலையில், அங்குள்ள ஒரு அறைக்குள் நுழைந்துள்ளார் ஜென்னி.
அங்கே, மணமகன் தன்னுடைய தாயிடம் தாய்பால் குடித்துக்கொண்டு இருந்தாராம். இதைப் பார்த்து அதிர்ந்து போன ஜென்னி, பதறியடித்து கொண்டு வந்து, இந்த விஷயத்தை மணமகளிடம் சொல்லி உள்ளார். உடனே மணமகளும், அந்த ரூமுக்குள் ஓடிவந்து இந்த காட்சியை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனாராம்.
ஜார்ஜ் இதை கூறியதும் அதை கேட்ட நிகழ்ச்சியின் ஹோஸ்ட்டும் “இது உண்மைதானா?” என ஆச்சரித்துடன் கேட்டுக்கொண்டிருந்தார். சின்ன குழந்தையாக இருந்தபோது ஆரம்பித்த பழக்கம், இப்போதுவரை மாப்பிள்ளையால் நிறுத்த முடியவில்லையாம்.
ஆனால், இதில் ஹைலைட் என்னவென்றால், இந்த காட்சியை நேரடியாக பார்த்து அதிர்ச்சி அடைந்த மணப்பெண், எந்தவித சர்ச்சையையும் எழுப்பவில்லை. எந்த கேள்வியையும் மணமகனை கேட்கவும் இல்லையாம்.
திட்டமிட்டபடியே அந்த திருமணமும் இனிமையாக நடந்து முடிந்ததாம். இந்த விஷயத்தை ஜென்னி, தன்னுடைய ஓனர் ஜார்ஜியிடம் வந்து ஆச்சரியத்துடன் சொல்லி உள்ளார். உடனே ஜார்ஜ் இதை கேட்டதும், இதெல்லாம் உண்மையா? என்று கேட்டாராம்.
இந்த தகவலை இப்போது பொதுவெளியில் பகிர்ந்துள்ளதே ஜார்ஜ்தான். ஆனால், அந்த தம்பதி யார் என்ற அடையாளத்தை ஜார்ஜ் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.