இலங்கையை சேர்ந்த இளம் பெண்ணொருவர் அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தவறினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண் திருமணமாகி 17 நாட்கள் கடந்த நிலையில் பித்தப்பை கல் அகற்றுவதற்கு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தவறு காரணமாக அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றபட்டு நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
இதனை உயிரிழந்த பெண்ணின் உறவு முறை சகோதரர் ஒருவர் அவரது பேஸ்புக்கில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் “இவர் எனது உறவு முறை சகோதரி புத்திக்கா ஹர்ஷனி தர்மவிக்ரம.இன்று அவரது பிறந்த நாள் ஆனால் அவர் சவப்பெட்டியில் வீட்டிற்கு வந்துள்ளதாகவும் மருத்துவரின் தவறால் எங்கள் தேவதையை இழந்துவிட்டோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Also Read : விக்ரம் மகனுக்கு ஜோடியாகும் வாரிசு: யார் மகள்னு தெரியுமா?