in ,

காஃபி குடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் அதிகமாக ஷாப்பிங் செய்வார்களா..!

வேலை நேரத்தில் பலரும் விரும்பி குடிக்கும் சூடான சுவையான பானம் காபி. காபியை குடித்தால் ஒருவித புத்துணர்வு கிடைப்பது போன்றும், அதனால் சுறுசுறுப்பாக இருப்பது போன்றும் நாம் உணர்வோம். இதற்காகவே பலர் காபியை குடித்து வருகின்றோம்.

காபியில் உள்ள காஃபின் என்கிற மூலப்பொருள் தான் இப்படி ஒரு உணர்வை நமக்கு தருகிறது. இது உலகின் மிகவும் பிரபலமான தூண்டுதல்களை கொண்ட மூலப்பொருட்களின் ஒன்றாகும். மில்லியன் கணக்கானவர்கள் வெவ்வேறு வகையான பானங்களில் இதை உட்கொள்கின்றனர்.

இந்த காஃபின் மூலப்பொருளில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளது. இது வெவ்வேறு வடிவங்களில் கிடைக்கிறது. எளிய காபி மற்றும் தேநீர் முதல் எனர்ஜி பானங்கள் மற்றும் பயிற்சிக்கு முந்தைய ஷேக்ஸ் வரை இந்த காஃபின் மூலப்பொருளை சேர்க்கின்றனர்.

சமீபத்தில் ​​​​சவுத் புளோரிடா பல்கலைக்கழகத்தின் புதிய ஆராய்ச்சியில் இது குறித்த பல தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில், காஃபின் கலந்த பானத்தை உட்கொண்டால் அதிக அளவில் பணத்தை செலவு செய்து ஷாப்பிங் செய்ய கூடிய மனநிலை உருவாகுகிறது என்று கண்டறிந்து உள்ளனர்.

இந்தியாவில் காபி மற்றும் டீ கடைகள் பரவலாக உள்ளன. சில சில்லறை விற்பனைக் கடைகள், செலவினங்களைத் தூண்டக்கூடிய இலவச பானங்களையும் வழங்குகின்றன.

இந்த காஃபின் ஒரு சக்தி வாய்ந்த மூலப்பொருளாக இருப்பதால், இது மூளையில் டோபமைன் ஹார்மோனை வெளியிடுகிறது. நம் உடலில் இந்த ஹார்மோன் அதிகமாக இருப்பதைத் தொடர்ந்து, நாம் மிகுந்த மகிழ்ச்சியையும் ஆற்றலையும் உணர்கிறோம். இது ஷாப்பிங் செய்யும்போது அதிக பணத்தை செலவு செய்ய வழிவகுக்கும்.

அதே போன்று ஒரு நபரின் சுயக்கட்டுப்பாட்டிலும் டோபமைன் பங்கு வகிக்கிறது. இந்த ஆராய்ச்சியில், 300-க்கும் மேற்பட்ட கடைக்காரர்களுக்கு ஒரு கப் காபி வழங்கப்பட்டது, அதில் சுமார் 100 மில்லிகிராம் காஃபின் இருந்தது, மற்றவர்களுக்கு டிகாஃப் மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது.

இந்த கடைக்காரர்கள் கடைகளில் இருந்து வெளியேறும் போது தங்கள் ரசீதுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். சில்லறை விற்பனைக் கடையில் நுழைவதற்கு முன்பு மக்கள் மீது நடத்தப்பட்ட சோதனைகள் காபியை உட்கொள்பவர்கள் 50% அதிகமாகச் செலவழித்து 30% அதிகமான பொருட்களை வாங்குவதைக் காட்டுகிறது. இந்த ஆய்வு முடிவுகள் பலருக்கும் ஆச்சரியத்தையும் தந்தது.

இதில் கவனிக்கப்பட்ட மற்றொரு விளைவு என்னவென்றால், எந்த வகையான காஃபின் கலந்த பானத்தையும் உட்கொண்டாலும் இது போன்று அத்தியாவசியமற்ற பொருட்களை வாங்கும் நிலையை அவர்களின் மூளை உருவாக்குவதாக தெரிவித்தனர். மக்கள், காஃபின் உட்கொண்ட பிறகு மகிழ்ச்சியில் தங்களுக்கு பிடித்தவற்றை தயக்கம் இல்லாமல் வாங்க தூண்டப்படுகின்றனர்.

மேலும், ஆன்லைன் ஷாப்பிங் மூலம் மற்றொரு பரிசோதனையை செய்தபோது, அதிலும் இதே போன்ற முடிவுகள் தான் கிடைத்தது. எனவே இந்த முடிவுகளின் மூலம் தெரிய வருவது என்னவென்றால், காஃபின் உள்ள பானங்களை பருகும் போது பணத்தை கவனமுடன் செலவழிக்க வேண்டும் என்பது தான்.

What do you think?

Written by WebDesk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

விஜய் டிவியில் இருந்து வெளியே வந்த ரட்சிதா.. பம்பர் பிரைஸ்

ஜூலை மாதம் கொண்டாடப்படும் பண்டிகைகள்