பிரபல சீரியல் நடிகையான சைத்ரா ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை உசுப்பேத்தி உள்ளார்.நடிகை சைத்ரா ரெட்டி, விஜய் டிவி-யில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் தான் முதன் முதலில் சின்னத்திரையில் அறிமுகமானார்.எனினும் இவர் அதிகம் பிரபலமானது என்னவோ ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி சீரியல் மூலம் தான்.
இந்த சீரியலில் ஸ்வேதா என்ற வில்லி கேரக்டரில் அவர் நடித்து மிரட்டி இருப்பார். இதனால், அவருக்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.நடிகை சைத்ரா ரெட்டி தற்போது, சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களுள் ஒன்றான கயல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்தாண்டு அக்டோபர் ஒளிபரப்பான இந்த சீரியல் கடந்த சில வாரங்களாக முன்னணி சீரியல்களை முந்திக்கொண்டு முதலிடத்தை பிடித்து வருகிறது.
கயல் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய எப்படி தினமும் போராடுகிறாள் என்பதே இந்த சீரியலின் மையக்கதை. கயல் ரோலில் நடிகை சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். அவரது அமைதியான காதலன் எழிலரசனாக ராஜா ராணி புகழ் சஞ்சீவ் கார்த்திக் நடிக்கிறார்.சைத்ரா நடிகர் அஜித்தின் வலிமை படத்தில் லதா ரோலில் நடித்து இருந்தார்.
அவர் வரும் காட்சிகள் குறைவாக இருந்தாலும், அவரது நடிப்பிற்காக ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களை பெற்றார். அதே, சிபி ராஜ், ஆண்ட்ரியா நடித்து ஓடிடியில் வெளியான வட்டம் திரைப்படத்திலும் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.நடிகை சைத்ரா ஷூட்டிங் இல்லாத நேரங்களில் போட்டோஷூட் எடுத்து
தனது இன்ஸ்டாவில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது, காட்டன் புடவையில், மரத்தில் சாய்ந்தபடி நின்றுக்குக் கொண்டு Kiss kiss me என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஏகத்திற்கும் குஷியாகி முத்தமழை பொழிந்து வருகின்றனர்.