பிரித்தானிய உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன், சட்ட விரோத புலம்பெயர்வோருக்கெதிரான புதிய கட்டுப்பாடுகள் குறித்த திட்டங்களை இன்று வெளியிட இருக்கிறார்.
அதன்படி, சிறுபடகுகளில் பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்ட விரோத புலம்பெயர்வோரின் புகலிடக்கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாது.
அதற்கு பதில், அவர்கள் உடனடியாக ருவாண்டா அல்லது பாதுகாப்பான மற்றொரு நாட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.
மேலும், சட்ட விரோதமாக பிரித்தானியாவிற்குள் நுழைவோர் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவதுடன், வாழ்நாள் முழுவதும் அவர்கள் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இன்று சட்ட விரோத புலம்பெயர்வோருக்கு எதிரான சட்டங்கள் குறித்த விவரங்களை வெளியிட இருக்கிறார் பிரித்தானிய உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன்.
அவர் அறிமுகம் செய்ய இருக்கும் சட்டங்கள், பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்ட விரோத புலம்பெயர்வோரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றுவதுடன், அவர்கள் காலத்துக்கும் பிரித்தானியாவுக்குள் திரும்ப வருவதற்கும், குடியுரிமை கோருவதற்கும், மறுகுடியமர்வதற்கும் விண்ணப்பிக்க கூட அனுமதி மறுக்க வழிவகை செய்ய இருப்பதாக அரசு வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.