பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் ஊரு
விட்டு ஊரு வந்த டாஸ்க் தொடர்ந்தது. இதில் நேற்று முன் தினம் கொடுக்கப்பட்டதை போன்றே பட்டிக்காடா பட்டணமா என்ற தலைப்பில் விவாத மேடை நடத்தப்பட்டது.
இதில் கிராமத்தினர் நகரத்தினரும் கொடுக்கப்பட்ட தலைப்புகளுக்கு ஏற்ப விவாதம் செய்தனர். இதனை தொடர்ந்து டாஸ்க்கில் குறைந்த ஈடுபாட்டுடன் பங்கேற்ற போட்டியாளர்களை தேர்வு செய்யுமாறு கூறினார் பிக்பாஸ். இதில் வருணும் அபினய்யும் சுவாரசியம் குறைவாக இருந்த போட்டியாளர்கள் என தேர்வு செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து அவர்களுக்கு விடிய விடிய தீ மூட்டி அணையாமல் பார்த்துக்கொள்ளுமாறு தண்டனை கொடுத்தார் பிக்பாஸ். அதனை தொடர்ந்து பெஸ்ட் பர்ஃபாமர் யார் என இரண்டு பேரை தேர்வு செய்யுமாறு கூறினார் பிக்பாஸ்.
அதற்கு நகரத்தினர் டீம்மில் இருந்து சிபியும் கிராமத்தினர் டீம்மில் இருந்து ராஜும் தேர்வு செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் அடுத்த வாரத்திற்கான கேப்டன் டாஸ்க்கிற்கு நேரடியாக செலக்ட்டானதாக அறிவித்தார் பிக்பாஸ்.
ஏற்கனவே சிபி ஒரு முறை பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக இருந்துள்ளார். அப்போது அவர் ஹானஸ்ட்டாக நடந்து கொண்டதாகவும், சரியாக அவரது வேலையை செய்ததாகவும் சக போட்டியாளர்களால் பாராட்டப்பட்டார்.
இந்நிலையில் வரும் வாரத்திற்கான கேப்டன் டாஸ்க்கிற்கு இருவரும் தேர்வு ஆகியுள்ளனர். ஏற்கனவே ஒருமுறை கேப்டன் டாஸ்க்கில் பங்கேற்ற ராஜு தோல்வியை சந்தித்தார்.
இதனால் வரும் வாரத்தில் வெற்றி பெற வேண்டும் என தீயாய் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கேப்டன் டாஸ்க்கில் போட்டி களேபரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.