Save 20% off! Join our newsletter and get 20% off right away!

அக்ஷரா, பிரியங்கா எல்லாமே பாவம்.. கடுப்பான ரசிகர்கள்!

அக்ஷரா

பாட்டில் எடுக்கக் கூட போகாமல் சாப்பாடு தான் முக்கியம் என இருந்த பிரியங்காவையும் சத்தமா பேசினாலே பிடிக்காது என சமுத்திரம் பட பிரமீடு நடராஜன் போல இருந்த அக்‌ஷராவையும் இப்படி வெறிப் பிடித்த வேங்கை என பாய்ந்து தாக்கியது நியாயமா சிபி? என நெட்டிசன்கள் கிழித்துத் தொங்க விட்டு வருகின்றனர்.

கேமை கேமாக பெண்களே சூப்பராக களத்தில் இறங்கி விளையாடிக் கொண்டிருக்கும் போது தேவையில்லாமல் வயலென்ஸை அதில் திணித்தது நம்ம மாஸ்டர் சிபி தான் என நெட்டிசன்கள் அவரை வட்டமிட்டு காண்பித்து வச்சு செய்கின்றனர்.

சிபியின் இமேஜ் இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்கள் மத்தியில் வளர ஆரம்பித்துள்ள நிலையில், இப்படி மொத்தத்தையும் போட்டு உடச்சிட்டீங்களே என்றும் திட்டி வருகின்றனர்.

ராஜு ஜெயமோகன், நிரூப் எல்லாம் கேமை நல்லா விளையாடுறாங்க நாமும் களத்தில் இறங்கி விளையாட வேண்டும் இல்லை என்றால் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் என நினைத்த சிபி சும்மா களத்தில் இறங்கி விளையாடி வருகிறார். ஆனால், ஓவராக சீறி பாய்ந்தாலும் பிரச்சனை ஏற்பட்டு விடும் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

செண்பகமே செண்பகமே டாஸ்க்கில் ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து விளையாடினார்கள். இதில், திடீரென சிபி எல்லை மீறி விளையாட ஆரம்பித்தது பெரும் பரபரப்பை கிளப்பியது. சிபி அப்படி விளையாடி இருக்கக் கூடாது என்றும் பெண்கள் மீது பிசிக்கல் வயலென்ஸ் செய்தது போல அவருடைய கேம் இருந்ததாக வீடியோக்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

பிரியங்காவிடம் இருக்கும் பால் பாட்டிலை பிடுங்கி தங்கள் அணியினரிடம் தூக்கிப் போட்டு அவரை தள்ளி விட்டு ஒரே அதகளம் செய்து விட்டார் சிபி. மேலும், நீல நிற உடை அணிந்து இருந்த அணியினர் பாதுகாத்து வைத்திருந்த ஏரியாவிலும் சென்று முதல் நபராக பால் பாட்டிலை திருட அவர் முயற்சித்தது தான் கேமயே கெடுத்தது.

சிபி நீல நிற யூனிஃபார்ம் போட்ட அணியினரிடம் அத்துமீற ஆறடி பயில்வான் ஆக்வாமேன் நிரூப் ஆரஞ்சு அணியில் இருந்த பாட்டில்களை மொத்தமாக தூக்கி வீசி விட்டார். இப்படி இரு அணியினரும் மாறி மாறி மோதிக் கொள்ள பிக் பாஸ் வீடே மீன் மார்க்கெட் ஆனது.

பசு மாட்டிடம் பால் கரந்து கொண்டிருந்த அக்‌ஷராவிடம் இருந்தும் பாலை பறிக்க முயன்றார் சிபி. பதிலுக்கு, அக்‌ஷராவும் சிபியுடன் மல்லுக்கட்ட இருவருக்கும் இடையே ஒரு பெரிய மோதலே வெடித்தது. கேமுக்கான ஒரு சரியான ரூல்ஸை போட்டுக் கொண்டு விளையாடி இருந்தாலே இந்த கூச்சலும் குழப்பமும் வந்திருக்காது. ஆனால் அது தானே ஷோவுக்கு முக்கியம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.