பிரபல நடிகையுடன் தொடர்பில் இருந்ததாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அதுபற்றி நடிகர் நரேஷ் விளக்கம் அளித்திருக்கிறார்.
இருவரும் ஓட்டல் அறையில் இருப்பதை பார்த்த நரேஷின் 3வது மனைவி ரம்யா, அவரை செருப்பை கொண்டு தாக்க முற்பட்டார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதன்பின்னர் நரேஷ் விசில் அடித்துக் கொண்டே லிஃப்டில் சென்றார். இதுதொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் நரேஷ். இவர் 200க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். இவரது 3வது மனைவியின் பெயர் ரம்யா.
நரேஷுக்கும், ரம்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் பிரபல நடிகை பவித்ராவுடன், நரேஷ் ஓட்டல் அறை ஒன்றில் தங்கியிருந்தார். இதுபற்றிய தகவல் ரம்யாவுக்கு எப்படியோ கிடைத்துள்ளது.
அவர் உடனடியாக ஓட்டலுக்கு வர, அந்த தகவலை அறிந்த நரேஷ் உடனடியாக வெளியே கிளம்பினார். வெளியே வந்தபோது, ரம்யா அவரை செருப்பால் அடிக்க முற்பட்டார். பின்னர் ரம்யாவை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அதைத்தொடர்ந்து ரம்யாவை பார்த்து விசில் அடித்துக் கொண்டே சென்றார் நரேஷ்.
இதுதொடர்பான வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் நரேஷ் விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘ரம்யா என்னை தொடர்ந்து ப்ளாக் மெய்ல் செய்து வந்தார். என்னிடம் அவர் மனைவி போல நடக்கவில்லை.
200க்கும் அதிகமான படங்களில் 100க்கும் அதிகமான ஹீரோயின்களுடன் நடித்துள்ளேன். யாரும் என்னை தவறாக கூறியது கிடையாது. ரம்யாவின் சித்ரவதையை என்னால் தாங்க முடியவில்லை. சமீபத்தில்தான் ரூ. 10 லட்சத்தை அவருக்கு அளித்தேன்’ என்று கூறியுள்ளார்.
ரம்யாவுக்கு எதிராக சமீபத்தில் 5 பெண்கள் மோசடி புகாரை காவல் நிலையத்தில் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.