பிக்பாஸ் போட்டியாளர்
ஹிந்தி பிக்பாஸ் போட்டியாளர் சஜித்கான் மீது பிரபல நடிகை போலீசில் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.
பாலிவுட்டில் பிரபல இயக்குனராக வலம் வரும் சஜித்கான் பல ‘மீடு’ கேஸ்களில் சிக்கியவர். சல்மான் கான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 16 வது சீசனை ஹிந்தியில் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக்பாஸ் சீசன் 16 நிகழ்ச்சியில் சஜித்கான் போட்டியாளராக கலந்துக்கொண்டதற்கு பல பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் மும்பை ஜூஹு காவல் நிலையத்தில் நடிகை ஷெர்லின் சோப்ரா நேரில் சென்று சஜித்கான் மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஷெர்லின் ‘ போலிஸில் புகார் அளித்தேன். ஆனால் எனக்கு யாரும் உதவவில்லை.
எனக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பெண்ணின் நிலைமையை நினைத்துப் பாருங்கள். மேலும் சஜித்கானுக்கு நடிகர் சல்மான் கான் உதவி செய்வதால் சஜித்கானை யாரும் நெருங்க முடியாது என நடிகை ஷெர்லின் சோப்ரா கூறியுள்ளார்.
வழக்கில் பாரபட்சமற்ற நீதி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.