90களில் கனவு கன்னியாக வலம் வந்த மீனா, ரஜினி, கமல், அஜீத் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமடைந்தார்.
இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து திரை உலகில் கலக்கினார்.
இவர் 2009ஆம் ஆண்டில் பெங்களூரை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயரான வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நைனிகா என்ற ஒரு மகளும் உள்ளார்.
சமீபத்தில் நைனிகா விஜய்யின் மகளாக தெறி படத்தில் நடித்து பிரபலம் அடைந்தார்.
தற்பொழுது இளம் நடிகைகளுக்கு சவால் கொடுக்கும் வகையில் மிகவும் ஸ்லிம்மாக மாறி தனது க்யூட்டான புகைப்படங்களை சமூக வலை தளத்தில் பதிவிட்டு வருகிறார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.