16.7 C
Hatton
Tuesday, April 13, 2021
spot_img
spot_img
spot_img

இதையும் படிங்க

ஓட்டுப் போடாத பிரபலங்கள் யார்? ஏன் தெரியுமா?

தமிழக சட்டசபைத் தேர்தலில் கேப்டன் விஜயகாந்த், நடிகர்கள் பார்த்திபன், தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த முறை வாக்களிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும், குறைந்தபட்சமாக வில்லிவாக்கத்தில் 55.12 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 7 மணி வரை நடைபெற்றது. இதில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல், அஜித், விஜய் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் காலையிலேயே வரிசையில் நின்று வாக்களித்தனர்.

முக்கியமாக, தமிழகத்திலுள்ள அரசியல் பிரபலங்கள் முதல், திரை பிரபலங்கள், மூத்த குடிமக்கள் என அனைவரும் உற்சாகமாக வாக்களித்தனர்.

மாலையில், வாக்குப்பதிவு முடிந்த உடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குப் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிலையில், தமிழக சட்டசபைத் தேர்தலில் வாக்களிக்காத சினிமா பிரபலங்கள் பற்றி சமூக வலைத்தளங்கில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, கேப்டன் விஜயகாந்த், நடிகர்கள் பார்த்திபன், தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த முறை வாக்களிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டதால் நேற்று சசிகலா வாக்களிக்கவில்லை. ஒவ்வொரு தேர்தலின் போதும், ஜெயலலிதா உடன் காரில் சென்று வாக்களிப்பதை சசிகலா செய்து வந்தார். ஆனால், இந்த முறை வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலா பெயர் நீக்கப்பட்டதால், அவரால் வாக்களிக்க முடியாமல் போனது.

அதே போல், தேமுதிக தலைவர் விஜயகாந்த், வாக்களிக்க வராததால் அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த வருத்தம் அடைந்தனர்.

அதே போல், “இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக, சட்டமன்ற தேர்தலில் தன் வாக்கைப் பதிவு செய்ய முடியவில்லை” என்று, நடிகர் பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

அத்துடன், “எனக்கு, ஏற்கனவே ஒவ்வாமை இருந்ததாலேயே இந்த பிரச்சனை ஏற்பட்டதாகவும், மக்கள் அனைவரும் அவசியம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்” என்றும், அவர் கேட்டுக்கொண்டார்.

முக்கியமாக, இந்த தேர்தலில் இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர் ரகுமான், யுவன் சங்கர் ராஜா, நடிகர் தனுஷ் உள்ளிட்ட ஏராளமானோர் வாக்களிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

“தி க்ரே மேன்” என்ற பெயரில் தயாராகும் ஹாலிவுட் படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த நிலையில், “தி க்ரே மேன்” ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக தனுஷ் கடந்த பிப்ரவரி மாதமே அமெரிக்கா சென்று உள்ளார்.

அங்கு தங்கி இருந்து ஹாலிவுட் நடிகர்களுடன் இணைந்து நடிக்கிறார். மே மாதம் வரை படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு, அதன் பிறகே அவர் சென்னை திரும்புகிறார். இதனால், அவரால் நேற்றைய தினம் வாக்களிக்க முடியவில்லை.

மேலும், இயக்குனர்கள் மணிரத்னம், வெற்றிமாறன், நடிகர்கள் கவுண்டமணி, வடிவேலு, கே.பாக்யராஜ், மோகன், கார்த்திக், ராஜ்கிரண், அரவிந்த் சுவாமி, பிரபுதேவா, லாரன்ஸ், விஷால் ஆகியோரும் வாக்களிக்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்