விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் தேவயானி.
இவர் குடும்பப்பாங்கான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்துள்ளார். எந்த ஒரு படத்திலும் கவர்ச்சி காட்டியது கிடையாது.
சினிமாவில் உயரத்தில் இருந்த தேவயானி தன்னை அறிமுகம் செய்த இயக்குனர் ராஜ்குமாரை கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமானார்.
அதன்பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோலங்கள் என்ற தொடரில் நாயகியாக நடித்தார்.
தற்போது பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்துவரும் நடிகை தேவயானி, தற்போது ஒருசில படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்துவருகிறார்.
இவருக்கு இனியா மற்றும் ப்ரியங்கா என இரண்டு மகள்கள் உள்ளனர். பொதுவாக படங்களிலும் கலந்து கொண்ட விழாக்களிலும் கவர்ச்சி உடையை தேவயானி பெரும்பாலும் அணிந்ததில்லை.
தற்போது இவருடைய கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வலம் வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இவரா இப்படியெல்லாம் போஸ் கொடுத்திருக்கிறார் என அந்த புகைப்படத்தை பரப்பி வருகிறார்கள்.
இந்த புகைப்படம் பல வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலானோர் இந்த புகைப்படத்தை பார்த்ததில்லை என்பதால் இது தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.