ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் ரஜினியுடன் நடித்த ‘சிவாஜி’ படம் மூலம் பிரபலமானார்.
அதையடுத்து விஜய்யுடன் ‘அழகிய தமிழ் மகன்’ மற்றும் விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி, ஜீவா உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
ஆனால், தமிழில் இவர் நடித்த பல படங்கள் தோல்வியடைந்ததால், தெலுங்கு மற்றும் இந்தியில் நடிக்க தொடங்கினார். அங்கு இரண்டாவது கதாநாயகி அந்தஸ்த்தில் நடித்து வந்தார்.
இந்நிலையில் இவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்துகொண்டு கணவருடன் பார்சிலோனாவில் வசித்து வருகிறார்.
தற்போது, கருப்பு உடை அணிந்து கேரவேன் மேக்கப் ரூமில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.