பள்ளிக்குழந்தைகள் முதல் இளம் பெண்கள் வரை பலரும் சாமியார்களை நம்பி மோசம் போய் கொண்டிருக்கின்றனர்.
அப்படிப்பட்ட சாமியார் ஒருவர் பிரபல நடிகை வாழ்க்கையில் விளையாடி உள்ளதை சமீபத்தில் ஓபன் ஆக தெரிவித்துள்ளார் அந்த நடிகை.
பாலிவுட் சினிமாவில் பிரபலமாக இருப்பவர் அனுப்பிரியா கோயங்கா. சமீபத்தில் MX தளத்தில் வெளியான பாஞ்சாலி என்ற வெப்சீரிஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் செம ஃபேமஸ்.
இதுதவிர பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களான சல்மான்கான் மற்றும் ரித்திக் ரோஷன் ஆகியோரின் படங்களிலும் நடித்து பிரபலமானவர்.
அனுப்பிரியா சமீபத்தில் பிரபல சாமியார் ஒருவர் தனக்கு பதினேழு, பதினெட்டு வயது இருக்கும் போது தன்னிடம் தவறாக முயன்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்து மீறி தன் மீது ஏறி தவறாக நடக்க பார்த்தபோது சிறு வயதாக இருந்ததால் நான் எப்படியோ தப்பித்து விட்டேன் என குறிப்பிட்டுள்ளார் அனுப்ரியா.
வழக்கம்போல் யாரந்த சாமியார் என்பதை சுட்டிக் காட்டாமல் தற்போது முன்னணியில் இருக்கும் ஒரு சாமியார் என ஹின்ட் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.