16.7 C
Hatton
Tuesday, April 13, 2021
spot_img
spot_img
spot_img

இதையும் படிங்க

நீல நிற புடவையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் பார்வதி நாயர்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டதும், பலருக்கும் வீட்டிலேயே இருந்து போர் அடித்திருக்கும்.

ஆனால் என்ன தான் போர் அடித்தாலும், அதைப் போக்கும் வண்ணம் பல நடிகைகள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் தங்களின் போட்டோக்களை வெளியிட்டு, ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்து வந்தனர்.

அப்படி சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி போட்டோக்களை போட்டு ரசிகர்களை தன் அழகில் மயங்க வைத்தவர் தான் பார்வதி நாயர்.

மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான இவர் தமிழிலும் நடித்துள்ளார். இவர் அவ்வப்போது பல கவர்ச்சிகரமான போட்டோக்களை எடுத்து அவரது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருவார்.

அப்படி தான் சமீபத்தில் ராயல் நீல நிற புடவை ஒன்றில் பலவிதமான போட்டோக்களை எடுத்து வெளியிட்டிருந்தார்.

இவர் அணிந்திருந்த நீல நிற புடவை இவருக்கு அழகிய தோற்றத்தைக் கொடுத்ததோடு, அவரை படு கவர்ச்சியாகவும் காட்டியது.

இது தான் சமூக வலைத்தள பக்கத்தில், நடிகை பார்வதி நாயர் ஸ்வப்னா ரெட்டியின் ஸ்வாத் பிராண்டில் இருந்து அடர் நீல நிற புடவை அணிந்து வெளியிட்ட போட்டோ.

இந்த ப்ளைன் புடவை மெல்லிய எம்பிராய்டரி பார்டரைக் கொண்டிருந்ததுடன், அவரை அட்டகாசமாக காட்டியது.

அடர் நீல நிற ப்ளைன் புடவைக்கு பார்வதி நாயர் அணிந்திருந்த எம்பிராய்டரி செய்யப்பட்ட ஜாக்கெட் அவரது தோற்றத்தை இன்னும் அழகாக வெளிப்படுத்தியது. முக்கியமாக புடவையை அணிந்திருந்த விதம் அவரை படு கவர்ச்சியாக வெளிக்காட்டியது.

பார்வதி நாயர் இந்த நீல நிற புடவைக்கு பொருத்தமாக கண்களை அழகாக காட்டும் வண்ணம் ஐ-மேக்கப் போட்டிருந்ததுடன், உதடுகளுக்கு வெளிரிய சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டிருந்தார்.

மேலும் ஹேர் ஸ்டைல் என்று வரும் போது, உடைக்கு பொருத்தமாக கொண்டை போட்டிருந்தது அவரை இன்னும் அற்புதமாக காட்டியது.

ஆபரணங்களைப் பற்றி பேசுவதானால், இவர் கழுத்திற்கு முத்து மற்றும் சபையர் பதிக்கப்பட்ட சோக்கர் மற்றும் காதுகளுக்கு கோல்டன் ஜமிக்கிகளை அணிந்திருந்தார். அதோடு கால்களில் கோல்டன் நிற ஹீல்ஸ் அணிந்திருந்தார்.

இது சமீபத்தில் ஓணம் பண்டிகையன்று பாரம்பரிய கேரள புடவையை அணிந்து எடுக்கப்பட்ட சில பார்வதி நாயர் போட்டோ.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்