Homeசினிமாபஞ்சுமிட்டாய் உடையில் நீலிமா ராணி - திணறும் ரசிகர்கள்..!

பஞ்சுமிட்டாய் உடையில் நீலிமா ராணி – திணறும் ரசிகர்கள்..!

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், நீலிமா ராணி. பல படங்களில் ஹீரோக்களுக்கு தங்கையாகவும், தோழியாகவும் நடித்துள்ளார்.

20 வயதிலேயே திருமணம் செய்து கொண்டாலும், தன்னுடைய குடும்பம் கொடுத்த ஊக்கத்தினால், தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார்.

நீலிமாராணி நடிகையாக மட்டுமல்லாமல் சின்னத்திரையில் தயாரிப்பாளராகவும் விளங்கி வருகிறார். அதாவது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தலையணைப் பூக்கள் மற்றும் என்றென்றும் புன்னகை ஆகிய சீரியல்களை நீலிமா ராணி தான் தயாரித்து கொண்டிருக்கிறாராம்.

அதோடு, தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பல சீரியல்களில் முன்னணி நடிகையாகவும், எதிர்மறை வேடங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நீலிமாராணி நடித்திருக்கிறாராம்.

இந்தநிலையில் நீலிமா ராணி தற்போது தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில், பஞ்சு மிட்டாய் கலர் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நீலிமா. இதனை பார்த்த ரசிகர்கள், ப்பா.. அப்டியே பிச்சு சாப்டலாம் போல இருக்கே.. என்று திணறி வருகின்றனர்.