Master Teaser: தமிழ் சினிமா உலகின் இன்றைய ஆகப் பெரிய எதிர்பார்ப்பு மாஸ்டர். தளபதி விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் இது.
இயக்கம், லோகேஷ் கனகராஜ். கொரோனா பெருந்தொற்று காரணமாக பட ரிலீஸ் தள்ளிப் போகிறது. எனினும் தனது ரசிகர்கள் திருப்தியே முக்கியம் என நினைக்கும் விஜய் நஷ்டத்தைப் பற்றிக் கவலைப்படாமல், தியேட்டர் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.
தீபாவளித் திருநாளில் தனது ரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டாமா? அதற்காகவே தீபாவளி தினத்தன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு படத்தின் டீசர் ரிலீஸுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் இதையே ஒரு திரைப்பட ரிலீஸ் அளவுக்கு சமூக வலைதளங்களில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.