விக்னேஷ் சிவன் தன் வாழ்நாளில் இயக்கிய 3 படங்களில் ஹிட் கொடுத்த ஒரே ஒரு படம் என்றால் அது நானும் ரவுடி தான்.
விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோரின் ஜோடி பெரிதும் பேசப்பட்டது. தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த நானும் ரவுடிதான் படம் வசூலிலும் சக்கை போடு போட்டது.
அதன் விளைவு தற்போது மீண்டும் பல வருடங்கள் கழித்து விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா, விஜய்சேதுபதி கூட்டணியில் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படம் உருவாக உள்ளது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் பிரபல முன்னணி நடிகை சமந்தாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார்.
ஆனால் நயன்தாராவுக்கு முக்கியத்துவம் கொடுத்து சமந்தாவை டம்மி செய்ததால் இந்த படத்திலிருந்து விலகி விட்டாராம் சமந்தா.
காதலர் விக்னேஷ் சிவன் செய்த விளையாட்டில் செம கடுப்பாகி உங்க சங்காத்தமே வேண்டாம் என ஓட்டம் பிடித்து விட்டாராம் சமந்தா.
இந்நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்காக வேறு ஒரு முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.