கல்கி கோச்சலின் உடன் லெஸ்பியன் உறவில் ஈடுபடும் நடிகை அஞ்சலியின் ஹாட் சீன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமேசான் பிரைமில் வெளியான புத்தம் புது காலை படத்திற்கு போட்டியாக நெட்பிளிக்ஸ் 4 இயக்குநர்கள் கூட்டணியில் பாவக் கதைகள் எனும் ஆந்தாலஜி படத்தை உருவாக்கி உள்ளது.
ஹாலிவுட், பாலிவுட்டில் வெளியானது போல ஏகப்பட்ட இயக்குநர்களின் கூட்டு முயற்சியில் ஆந்தாலஜி படங்கள் உருவாகி வருகின்றன. தமிழில் சமீபத்தில் அமேசான் பிரைமில் புத்தம் புது காலை என்ற படம் வெளியானது. சுதா கொங்கரா, கெளதம் மேனன், ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஒவ்வொரு கதை என மொத்தம் 4 கதைகளை இயக்கி இருந்தனர்.
அமேசானுக்கு போட்டியாக நெட்பிளிக்ஸிலும் ஆந்தாலஜி படம் விரைவில் வெளியாக உள்ளது. வெற்றிமாறன், சுதா கொங்கரா, விக்னெஷ் சிவன், கெளதம் மேனன் இயக்கத்தில் 4 தனிக் கதைகள் பாவக் கதைகள் என ஆந்தாலஜி படமாக நெட்பிளிக்ஸில் வரும் வரும் டிசம்பர் 18ம் திகதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளீயாகிறது.
சமீபத்தில் வெளியான பாவக் கதைகள் படத்தின் டிரெய்லரில் விக்னேஷ் சிவனின் ‘லவ் பண்ணா உட்றணும்’ படத்தின் கதை லெஸ்பியன் கதையாக உருவாகி இருப்பதால் பெரும் சர்ச்சை கிளம்பி உள்ளது. மேலும், அதில் லெஸ்பியான நடித்துள்ள அஞ்சலியின் படுக்கையறை காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் வெளியான அனுஷ்காவின் சைலன்ஸ் படத்தில் அஞ்சலி நடித்திருந்த நிலையில், தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஓரினச்சேர்க்கையாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படுக்கை அறையில் உள்ளாடையுடன் படு கவர்ச்சியாக அஞ்சலியும் கல்கி கோச்சலினும் படுத்திருக்கும் ஹாட் சீன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாவக் கதைகள் படத்தில் வெற்றிமாறன், கெளதம் மேனன், சுதா கொங்கரா படங்கள் வலிமையாக இருந்தாலும், விக்னேஷ் சிவனின் லெஸ்பியன் கதை தான் ரசிகர்களை அதிகம் ஈர்த்து டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. பாவக் கதைகள் படத்திற்காக ஏகப்பட்ட பேர் நெட்பிளிக்ஸ் இணைப்பை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.