வானவில் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அபிராமி சினிமாவில் அறிமுகமானார்.
அதன்பின் இவர் மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின் போன்ற சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் இவருக்கு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதன் பிறகு கமலுடன் சேர்ந்து விருமாண்டி என்ற திரைப்படத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.
அதன் பிறகு என்ன காரணமோ என்று தெரியவில்லை சுமார் 10 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார்.
ஜோதிகா நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான படம் 36 வயதினிலே இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் அசத்தினார் அபிராமி.
அதன் பிறகு தற்போது தமிழ், தெலுங்கில் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் வருகின்றன இதனால் அபிராமி ரசிகர்கள் மீண்டும் சந்தோஷத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் அபிராமி வெளியிட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.