Fri, May7, 2021

உயிரிழந்த விவேக் உடல் அவர் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது

நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று காலை தனது குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருக்கும் போது திடீர் என மயங்கி விழுந்ததால், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

நடிகர் விவேக்கின் உடல்நிலை மோசமானதால் எக்மோ கருவி உடன் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை குறித்து 24 மணி நேரம் கழித்தே கூறப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். இதை தொடர்ந்து அவரது உடல் மருத்துவமனையில் இருந்து விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

நடிகர் விவேக்கின் உடல் காலை 8.30 மணிக்கு மேல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

விவேக் இல்லம் இருக்கும் இடத்தில் 40-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர். கொரோனா பரவல் காரணமாக முறையாக வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

நடிகர் விவேக் 1961-ம் ஆண்டு கோவில்பட்டியில் பிறந்தவர். 500-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

நகைச்சுவை உடன் சிறந்த சமுதாய சீர்திருத்த கருத்துகளையும் கூறி நடித்து வந்தார். இதனால் அவர் சின்ன கலைவாணர் என்ற அடைமொழியால் ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசின் விருதை 5 முறை பெற்றவர் விவேக். 2009-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.

நடிகர் விவேக் மறைவிற்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

SEITHI.LK

விளையாட்டு

செய்திகள்