Fri, May7, 2021

வைல்டு கார்டு என்ட்ரியா அர்ச்சனா.. எப்போது?

பிக்பாஸ் தமிழில் நான்காவது சீசன் மிகவும் பரபரப்பாக நடந்து கொண்டு இருக்கிறது மொத்தம் 16 போட்டியாளர்களுடன் இந்த ஷோ துவங்கிய நிலையில் இந்த வாரம் ஒரு போட்டியாளர் நிச்சயம் வெளியேற்றப்படுவார் என தெரிகிறது.

இந்த நிலையில், பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா பிக் பாஸ் 4 வீட்டுக்கு வைல்டு கார்டு என்ட்ரி ஆக வரப்போகிறார் என தொடர்ந்து தகவல் பரவி வருகிறது.

பிக் பாஸ் நான்காவது சீசன் துவக்க நிகழ்ச்சி அன்றே அவர் போட்டியாளராக வர வாய்ப்பு இருக்கிறது என்றும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும் தகவல் வெளியாகி இருந்தது.

ஆனாலும் கடைசி நேரத்தில் அர்ச்சனா பிக் பாஸ் ஷோவில் கலந்து கொள்ளாமல் வெளியேறினார். அவர் வேறு ஒரு தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் நிலையில் அதன் பணிகள் முற்றிலும் பாதிக்கப்படும் என்பதால் தான் இந்த முடிவை அவர் எடுத்து இருக்கிறார் என கூறப்பட்டது

பிக்பாஸ் தொடங்கி இரண்டாம் வாரத்திற்கு வந்துவிட்ட நிலையில் அர்ச்சனா விரைவில் வைல்டு கார்டு என்ட்ரி ஆக வர இருக்கிறார் என தொடர்ந்து தகவல் பரவி வருகிறது.

அர்ச்சனா தற்போது தனிமைப்படுத்தி கொண்டு இருப்பதாகவும் இன்னும் சில தினங்களில் பிக்பாஸ் வீட்டுக்கு அவர் வர வாய்ப்பு இருக்கிறது என கூறப்படுகிறது.

மேலும் அர்ச்சனா வழக்கமாக இன்ஸ்டாகிராமில் அதிக அளவு புகைப்படங்களை பதிவேற்றி வரும் நிலையில், கடந்த சில தினங்களாக அவரது மகள் மற்றும் கணவர் போட்டோக்களை மட்டுமே பதிவேற்றி வருகிறார்.

அதனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார் என்பது உறுதியாகிறது என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

SEITHI.LK

விளையாட்டு

செய்திகள்