HomeCinemaடாக்டர் படம் எப்படி இருக்கு? டாக்டர் விமர்சனம்!

டாக்டர் படம் எப்படி இருக்கு? டாக்டர் விமர்சனம்!

பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம்தான் டாக்டர். அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

காமெடி ஹீரோவாக தொடங்கி ஆக்சன் ஹீரோவாக தன்னை மாற்றி கொண்டு வரும் சிவகார்த்திகேயனை வேறு ஒரு கோணத்தில் காட்டக் கூடிய படமாக உள்ளது டாக்டர். எந்தவித ஆரவாரமும் இன்றி அமைதியாக சமத்து பையனாக காணப்படுகிறார் சிவா. முதல் இரண்டு கியரில் வண்டி மெதுவாக செல்வது போல படம் ஆரம்பித்து ஒரு அரைமணி நேரம் மெதுவாகவே நகர்கிறது.

அதன்பின் டாப் கியரில் செல்லும் படம் எங்கேயும் நிற்கவில்லை. டாக்டர் திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோவாக ரவி மற்றும் யோகி பாபுவை கூறலாம். இவர்களது ஒன்லைனில் திரையரங்கமே அதிர்கிறது. இரண்டாம் பாதியில் வரும் வில்லன் வினய் அதிரடி வில்லனாக இல்லாமல் அமைதியான வில்லனாக காணப்படுகிறார்.

பிரியங்கா மோகனுக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியும். அருண் அலெக்சாண்டர், தீபா, இளவரசு போன்றோர் காமெடியில் அசத்தி உள்ளனர். அனிருத்தின் பின்னணி இசை ஒவ்வொரு சீனையும் அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்கிறது. செல்லம்மா பாடல் யூ டியூபில் வெளியாகி பல சாதனைகளை படைக்க உள்ளது.

என்னை தவிர வேறு யாரும் இதுபோல் ஒரு கதையை எழுதி இயக்கி விட முடியாது என்று மார்தட்டி சொல்லும் அளவிற்கு நெல்சன் இப்படத்திற்கு உழைத்துள்ளார். தனது முந்தைய படத்தை போலவே டார்க் காமெடி ஜானரில் கலக்கி இருக்கிறார் நெல்சன்.

சீமராஜாவில் தனக்கு மட்டுமே கதையில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தவறை சிவா, டாக்டர் படத்தில் அதனை திருத்திக் கொண்டு ஒவ்வொருவருக்கும் ஸ்கிரீன் ஸ்பேஸ் கொடுத்துள்ளார். குறிப்பாக மெட்ரோ பைட் சீன் மற்றும் இடைவேளைக்கு முன்பு வரும் காட்சிகள் பிரமாதம். மொத்தத்தில் இந்த டாக்டர் வசூல் மழையில் புது மருத்துவமனையே கட்டிவிடலாம்!

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க