Malayagam
Home » துணிகளை சுடு தண்ணீரில் தொடர்ந்து துவைப்பதால் என்ன நடக்கும் தெரியுமா?

துணிகளை சுடு தண்ணீரில் தொடர்ந்து துவைப்பதால் என்ன நடக்கும் தெரியுமா?

துணியில் அதிகப்படியான கறைகள் மற்றும் அழுக்குகள் இருக்கும் போது சுடுதண்ணீர் கொண்டு அலசுவதால் துணியில் இருக்கும் அழுக்குகள் நீங்கி பளிச்சென்று தெரியும். அப்படியாக அடிக்கடி சுடுதண்ணீர் கொண்டு அலசுவதால் என்ன நடக்கும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

1. சுடுதண்ணீரில் அடிக்கடி துணிகளை அலசுவதால் துணியின் தரம் பாழாகி விடும். அதே வேலையில் துணியும் சுருங்கி விடும்.

2. சுடு நீர் கொண்டு துணிகளை அலசும் போது துணியின் நிறம் மங்குவதுடன் துணியின் நூல் இழைகள் வலுவிழந்து விடும்.

3. ஒரு வேலை சுடுநீரில் துணிகளை அலசுவதாக இருந்தால் துணியின் ஒரு பகுதியை மட்டும் 5 நிமிடங்கள் ஊறவைத்து பரிசோதித்து பார்க்க வேண்டும். துணி சுருக்கமோ, நிறம் மாறுதலோ தென்பட்டால் சுடுநீர் பயன்படுத்துவதை அறவே தவிர்த்துவிட வேண்டும்.

4. துணிகளில் படியும் கறைகளை போக்குவதற்கு சுடு நீருக்கு மாற்றாக வினிகர் போன்ற பொருட்களை பயன்படுத்தலாம். மேலும் உடல்நல பாதிக்கப்பட்டவர்களின் ஆடை மற்றும் பெட்ஷீட், தலையணை உறை போன்றவற்றை மட்டும் சுடு நீர் பயன்படுத்தி சுத்தம் செய்வதும் நல்லது.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed