சந்தானம் நடித்திருக்கும் சபாபதி படம் நவம்பர் 19ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட குக் வித் கோமாளி புகழ் கூறியதாவது,
சேனலில் எப்பொழுது மைக் கொடுப்பார்கள் என்று காத்திருப்பேன். மைக் கொடுத்ததுமே டப்பு, டப்புனு பேசிடுவோம். இங்கு மைக் கொடுத்தும் படபடப்பாக இருக்கு.
சாலிகிராமத்தில் ஷூட் முடித்துவிட்டு பைக்கில் சென்று கொண்டிருந்தேன். இது தான் சந்தானம் சார் ஆபீஸ் என்று என் நண்பனிடம் சொன்னேன். திடீர்னு போன் வந்தது.
தம்பி, சந்தானம் சார் ஆபீஸில் இருந்து கூப்பிடுறோம், நீங்க எப்பொழுது வர முடியும் என்றார்கள். நான் கீழே தான் நிற்கிறேன் என்றேன்.
தம்பி, நீங்க விஜய் டிவியில பண்ற மாதிரியே காமெடி பண்ணாதீங்க. எப்போ வருகிறீர்கள் என்று ராஜ்குமார் சார் கேட்டார்.
நிஜமாகவே கீழே தான் சார் நிற்கிறேன் என்று சொல்லி, ஆபீஸுக்கு சென்றேன். அண்ணன் படத்தில் எப்பொழுது வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்தேன்.
நான் கார் வாங்கியதும் சந்தானம் அண்ணனிடம் தான் முதலில் காட்டினேன். எனக்கு ஒரு விநாயகர் சிலையை கொடுத்தார்.
முதல் கடவுளையும், முதல் வாய்ப்பையும் அண்ணன் தான் கொடுத்தார். இந்த படம் எனக்கு பயங்கரமான ஓபனிங்கா இருக்கும்.
அவர் சான்ஸ் கொடுத்ததும், இந்த படத்தில் அண்ணன் நம்ம வச்சு செஞ்சுடுவாப்ல என்று நினைத்தேன். இந்த படத்தில் அவர் சூப்பராக நடித்திருக்கிறார். படம் வேற லெவலில் வந்திருக்கிறது என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.