கவலைப்பட நேரமில்லை… கமலின் ஆடை சர்ச்சைக்கு வடிவமைப்பாளர் பதில்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்று முன்தினம் முடிவடைந்தது, இதில் அசீம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டியில் கமல்ஹாசன் அணிந்து வந்த பெயிண்ட் அடிக்கப்பட்ட உடை நெட்டிசன்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானது.

இந்த நிலையில் இந்த ஆடையை வடிவமைத்த டிசைனர் அமிர்தா என்பவர் இது குறித்து பேசிய போது, ‘கமல் சாரின் விருப்பத்தின்படி தான் இந்த ஆடை தயாரிக்கப்பட்டது, இந்த காஸ்டியூம் தயாரானதும் அவர் தனக்கு வாழ்த்து தெரிவித்தார் என்றும் கூறினார்.

கமல் அவர்களே இந்த ஆடையை பார்த்து ’குட் ஜாப்’ என பாராட்டினார், அதுவே எனக்கு போதும், சமூக வலைதளங்களில் இந்த காஸ்டியூம் கேலி செய்யப்படுவதை பற்றி கவலைப்பட எனக்கு நேரமில்லை, கலையை கலையாக தான் பார்க்க வேண்டும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஆடையை வேறு யாராவது திரும்ப பண்ண சொல்லுங்கள் பார்ப்போம் என்றும் அவர் சவால் விட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.