Malayagam
Home » பாலியல் புகாரில் இலங்கை வீரர் அதிரடி கைது… சிட்னி போலிஸார் நடவடிக்கை!

பாலியல் புகாரில் இலங்கை வீரர் அதிரடி கைது… சிட்னி போலிஸார் நடவடிக்கை!

தனுஷ்க குணதிலக்க கைது

தனுஷ்க குணதிலக்க கைது

டி20 உலகக் கோப்பையில் பங்கேற்ற இலங்கை அணி வீரரை சிட்னி போலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவுபெறவுள்ளன. இதில் குரூப் ஏ பிரிவு ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவுபெற்றுவிட்டன.

இலங்கை அணி அரையிறுதியில் இருந்து வெளியேறிவிட்டதால், அவர்கள் நாடுதிரும்ப ஆயத்தமானார்கள். இன்று சிட்னியில் இருந்து நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், இலங்கை அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவை சிட்னி காவல்துறை கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘தனுஷ்க குணதிலக்க மீது ஆஸ்திரேலிய பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருப்பதாகவும், இதனால்தான் கைது செய்யப்பட்டுள்ளார்’ எனவும் கூறப்படுகிறது. இருப்பினும், இன்னமும் அதிகாரப்பூர்வ தகவல் இன்னமும் வெளிவரவில்லை.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed