Save 20% off! Join our newsletter and get 20% off right away!

தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்கான நவம்பர் மாத ராசிபலன்

இன்றைய ராசிபலன்

தனுசு நவம்பர் மாத ராசிபலன்: இந்த மாதத்தில் உங்களின் ஆசை, கனவுகள் அதிகமாக இருக்கும். உங்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும். நண்பர்கள் மூலமாக ஆதாயம் கிடைக்கும். அதே சமயம் அவர்களால் உங்களின் ஓய்வு, தூக்கம் குறையும். செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. தேவையற்ற எண்ணங்களும், விரக்தி மன நிலை தரக்கூடியதாக இருக்கும்.

ராகு பகவான் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தருவார். 2ல் இருக்கும் குரு 3ம் இடத்திற்கு மாறுவதால் பல வழிகளில் சாதகமான பலனும், சந்தோஷமும் தந்தருளுவார்.

2ல் 2ம் அதிபதி சனி இருப்பதால் உங்களுக்கு நிதி ரீதியாக சங்கடம் ஏற்படும். அதனால் அதிகம் செலவு ஏற்படக்கூடிய காலத்தில், பணத்தை உங்கள் வீட்டு உறுப்பினர்களுடன் கொடுத்து செலவு செய்ய வைப்பது நல்லது.

சிம்மம், கன்னி நவம்பர் 2021 மாத ராசி பலன்

ஆணவமாக நடந்து கொள்ள வேண்டாம். எதிரிகளை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். அதன் மூலம் நல்ல படிப்பினைப் பெறுவீர்கள். தொழில், சார்ந்த விஷயங்களில் நன்மையானதாக இருக்கும்.

மாதத்தின் பிற்பகுதியாக கார்த்திகை மாதம் வரும் போது உங்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.

மகரம் நவம்பர் மாத ராசிபலன்: மகர ராசிக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதி ஏற்படும். தொழில், வியாபாரம், உத்தியோகம் போன்ற விஷயங்களை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பதால் மனக்குழப்பம் ஏற்படும். அதனால் அதை தாண்டி உங்களின் குடும்பம், நண்பர்கள் போன்றவற்றிலும் கவனம் செலுத்துங்கள். இதன் மூலம் உங்கள் மனகஷ்டம், குழப்பம் குறையும்.

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிக்கான நவம்பர் மாத ராசி பலன் 2021

தந்தை வழியில் நல்ல ஆலோசனைகளை பெற்றுக் கொள்வது தவறல்ல. கேது உங்களின் ஆசை, விருப்பங்களை நிறைவேற்றுவார். பிள்ளைகளால் சிறிய பின்னடைவு ஏற்படலாம். இருப்பினும் உங்கள் ராசிக்கு 12ம் இடத்தில் சுக்கிரன் இருப்பதால் உங்கள் வாழ்க்கையில் மிக சிறப்பான பலனைத் தருவார்.சந்தோஷத்தைக் கொடுப்பார்.

குரு பெயர்ச்சிக்கு பின் உங்களின் நிதி நிலையில் சங்கடம் ஏற்படலாம். உங்களின் செலவில் கவனம் செலுத்துவதால் நிதி அபாயங்களிலிருந்து தப்பிக்கலாம்.

கும்பம் நவம்பர் மாத ராசிபலன்: கும்ப ராசிக்கு நன்மையும், சில சங்கடங்களும் கலந்த மாதமாக இருக்கும். ராசிக்கு 4ல் ராகு இருப்பதால் மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்கள் வகையில் ஆதாயம் பெறுவீர்கள்.

தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். அபிவிருத்தி செய்வதற்கான பல வாய்ப்புகள் தேடி வரும். அதே சமயம் நீங்கள் நிதானமாக செயல்படுவது அவசியம். பல விஷயங்களைப் படித்திருந்தாலும், அதை செயல்படுத்தும் போது சில தடுமாற்றங்கள் ஏற்படலாம்.

மாத முற்பகுதியில் சூரியன் – கேது சேர்ந்திருப்பதால் தொழிலில் தடுமாற்றம் இருக்கும்.பிற்பகுதியில் சூரியன் 10ம் இடத்திற்கு வரும் போது தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம். குடும்பத்தில் பொறுமையுடன் செயல்படுவது அவசியம்.

குருவின் பெயர்ச்சி சாதகமானதக இருந்தாலும், எதிரியாக இருந்தாலும் அவரை மதித்து, சரியான திட்டமிடல், திறனுடன் எந்த ஒரு காரியங்களிலும் இறங்குவது நல்லது.

மீனம் நவம்பர் மாத ராசிபலன்: மீன ராசியினர் பொதுவாக கவனமாக இருக்க வேண்டிய மாதம். குறிப்பாக உங்கள் பேச்சில் நிதானமும், அடக்கமும் அவசியம். ஏனெனில் நீங்கள் ஒன்று நினைத்து பேசினால், அது வேறு வகையில் மற்றவர்களால் புரிந்து கொள்ளப்படும் என்பதால் நிலைமை பிரச்சினைக்குரியதாக மாறும்.

துலாம், விருச்சிகம் நவம்பர் 2021 மாத ராசி பலன்

குடும்ப விஷயத்தில் கருத்து தெரிவிப்பதில் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசவும். உங்களின் தொழில், வியாபாரத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். உத்தியோகத்தில் நீங்கள் நினைத்த மாற்றங்கள், முன்னேற்றத்தைப் பெற்றிட முடியும். வீடு, மனை வாங்கும் முயற்சியில் இருந்தால் சிறப்பான பலன் கிடைக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் உங்களுக்கு சாதகமான பலனை எதிர்பார்க்கலாம். சுப காரியங்கள் நடக்கும்.

பெண்களுக்கு ஆடை, ஆபரணம் வாங்கும் யோகம் உண்டு. தாய் சார்ந்த விஷயங்களில் இருந்த பிரச்னைகள் விலகும். நீங்கள் முன்னெடுக்கும் செயல்களில் நல்ல வெற்றியைப் பெற முடியும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உணவு விஷயத்தில் கவனம் தேவை.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.