பள்ளி பருவத்தில் இருந்தே விஜய் டிவியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருபவர் திவ்யதர்ஷினி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாய்ஸ் Vs கேல்ஸ், ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.
ஆனால், இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அடையாளத்தை பெற்று தந்த நிகழ்ச்சி என்றால், அது காப்பி வித் டிடி தான். தற்போது தொடர்ந்து விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவில்லை என்றலு, அவ்வப்போது முக்கியமான பட நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.
மேலும், தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள காபி வித் காதல் எனும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் டிடி, அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தேவதைபோல் வெள்ளை நிற உடையில் தன்னுடைய புகைப்படத்தை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
Leave a Reply
View Comments