Save 20% off! Join our newsletter and get 20% off right away!

பப்ஜியால் நேர்ந்த கொடூரம்: மதுபோதையில் மனைவியைக் கொன்ற கணவன்

கர்நாடகாவில் மகன் பப்ஜி விளையாடுவதை தந்தைக் கண்டித்த நிலையில், கணவன்- மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கணவன் துப்பாக்கியால் சுட்டதில் மனைவி உயிரிழந்தார்.

கர்நாடகா மாநிலம், சிக்கமகளூரு ஹகலகான் பகுதியைச் சேர்ந்தவர், இம்தியாஸ். இவரது மகன் எந்நேரமும் பப்ஜி விளையாடிக் கொண்டே இருந்துள்ளார். இதனால் தந்தை, மகனை கண்டித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்றும் மகன் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மதுபோதையில் வீட்டிற்கு வந்த இம்தியாஸ், மகனை கடுமையாகத் திட்டியுள்ளார்.

மேலும், துப்பாக்கியால் சுட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதையடுத்து, தாய் மைமுனா (40) இதில், தலையிட முயன்றபோது, ஆத்திரத்தில் இம்தியாஸ், மைமுனாவை துப்பாக்கியால் சுட்டதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுபோதையில் மனைவியைக் கொன்ற கணவன்மதுபோதையில் மனைவியைக் கொன்ற கணவன்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இம்தியாஸை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.