மனிதனுக்கு பொதுவாகவே சரியான தூக்கம் அவசியம். சராசரியாக 6 முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும். அப்படியில்லையெனில் பல உடல், மன நல கோளாறுகள் ஏற்படும் அவை என்னவென பார்போம்.
மூட் ஸ்விங்ஸ்:
6 முதல் 8 மணி நேரம் தூக்கமில்லாமல் இருப்பவர்களுக்கு மூட் ஸ்விங்ஸ் எனப்படும் தீவிர மனநிலை மாற்றங்கள் பொதுவானவை . இதனால், எரிச்சல், கோபம், சோர்வு , கவனசிதறல் போன்றவை ஏற்படும்.
மனநலத்தில் பாதிப்பு :
சரியான தூக்கம் இல்லை என்றால் ஒருவர் மன ஆரோக்கியம் சீர்கெடும். சரியாக தூங்கவில்லை எனில் க்ளினிக்கல் டிப்ரஷன் போன்ற மனநிலைக் கோளாறுகள் ஏற்படலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நோய் எதிர்ப்பு சக்தி பாதிப்பு:
தூக்கமின்மை உங்களில் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கும். ஒருவர் தூங்கும் போது தான் நோயெதிர்ப்பு அமைப்பு ஆன்டிபாடிகள் மற்றும் சைட்டோகைன்கள் போன்ற பாதுகாப்பு, தொற்று-எதிர்ப்புகளை உற்பத்தி செய்கிறது. அதனால், நோய் எதிர்ப்பு மண்டலம் சரியாக செயல்பட தூக்கம் அவசியம். அதே போல தூக்கமின்மை உடலுறவின் மீதான் ஆர்வத்தை குறைக்கும்.
Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.
Leave a Reply
View Comments