Malayagam
Home » நமக்கு நாமே ஏன் கிச்சு கிச்சு மூட்ட முடியல?… யோசிச்சிருக்கீங்களா?

நமக்கு நாமே ஏன் கிச்சு கிச்சு மூட்ட முடியல?… யோசிச்சிருக்கீங்களா?

கிச்சு கிச்சு

கூச்சம் என்பது எல்லாருக்கும் பொதுவான உணர்வு. சிரிக்க வைக்க முடியாத குழந்தைகளிடம் கூட கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைப்பவர்களே இங்கு அதிகம். பணிபுரியும் அலுவலகத்தில் கூட சக நண்பருக்கோ தோழிக்கோ கிச்சு கிச்சு மூட்டி விளையாடாதவர்களும், அப்படி கிச்சு கிச்சு தாக்குதலுக்கு ஆளாகதவர்களும் இருக்கவே முடியாது.

உண்மையில் கூச்சம் என்பது எல்லோருக்கும் பலவீனமான ஒரு விஷயம். ஒருவர் மற்றொருவரை கூச்சப்படுத்தினால், அது ஒருவர் எவ்வளவு சோகமாக இருந்தாலும் ஒரு இனம் புரியாத மகிழ்சியான உணர்வை உருவாக்குகிறது, இதனால் கிச்சு கிச்சு தாக்குதலுக்கு ஆளானவர் சத்தமாக சிரிக்கிறார்.

நமக்கு நாமே ஏன் கிச்சு கிச்சு மூட்ட முடியல?

யாராவது இப்படி கூச்சலிட்டால் அருகில் உள்ளவர்கள் பொதுவாக என்னவோ ஏதோ என்று திரும்பிப் பார்ப்பார்கள். இது கிச்சு கிச்சு மேட்டர் என்று தெரிந்தவுடன் சிரித்துக் கொண்டே நகர்ந்து விடுவார்கள்.

ஆனால் உங்களுக்கு நீங்களே இப்படி கிச்சுகிச்சு மூட்டிக் கொள்ளும்போது, அது ஏன் WORK OUT ஆக மாட்டேன் என்கிறது என எப்போதாவது நீங்கள் யோசித்திருக்கிறீர்களா? இந்த கேள்விக்கான பதிலை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.

இந்த 9 சென்ட் மணம் பெண்களுக்கு மிகவும் பிடிக்குமாம்… ஆண்களே… இன்னைக்கே வாங்கிடுங்க!

இதற்கு, நமக்கு ஏன் கூச்ச உணர்வு ஏற்படுகிறது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நம் உடலில் ஏராளமான முடிகள் உள்ளன. ஒரு மனிதனின் கை அதைத் தொடும்போது உடலில் ஏதோ ஒன்று இருப்பதைப் பற்றி மனம் நம்மை எச்சரிக்கிறது. கூச்சத்தை உணர நிறைய ஆச்சரியப்படுத்தும் கூறுகள் நம் உடலுக்குத் தேவை.

நமக்கு நாமே கிச்சு கிச்சு மூட்டும் போது, நம் கைவிரல்கள் கிச்சு கிச்சு மூட்டுவதற்கு முன்பே, நம் உடலின் தலைமைச் செயலகமான மூளை கூச்சம் ஏற்படப் போகிறது என்று ஏற்கனவே அதற்கான சமிக்ஞைகளை(SIGNALS) தோலுக்கு அனுப்பி விடுகிறது.

நமக்கு நாமே ஏன் கிச்சு கிச்சு மூட்ட முடியல?

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அந்த ஆச்சரியமான, எதிர்பார்க்காத தொடுதல் இல்லை என்பதால் அது கிச்சுகிச்சு உணர்வைத் தராமலே முடிவடைகிறது. ஆனால் வேறு யாராவது நம்மை கூசினால், மூளை இந்த சமிக்ஞையை முன்கூட்டியே அனுப்ப முடியாது. அதே நேரம், நம்மை நாமே கூச நினைக்கும் போது மூளை தன் பக்கத்திலிருந்து முழு திட்டத்தையும் தசைகளுக்கு சொல்கிறது.

ஆனால், இதே கூச்ச உணர்வு காரணமாக, மூளை நம்மை பல ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுகிறது. உடலில் பூச்சிகள் ஊர்வது போன்ற உணர்வு ஏற்படும் போது, அவற்றை நம் உடலில் இருந்து அகற்ற வேண்டும் என்ற உணர்வை உடனடியாக சில MICRO SECOND- களுக்குள் தருகிறது.

தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ளவில்லை என்றால் என்ன ஆகும்..?

இதன் காரணமாகத்தான், நமக்கு நாமே கிச்சு கிச்சு மூட்டும் போது, மூளை இது வெளியிலிருந்து ஏதேனும் பூச்சி தாக்கி விட்டதா, இல்லை நமக்கு நாமே கிச்சு கிச்சு மூட்டிக் கொள்கிறோமா என்பது புரியாமல் குழம்புகிறது.

நீங்கள் உங்கள் நகைச்சுவை திறமையால் எத்தனை பேரை வேண்டுமானாலும் சிரிக்க வைக்கலாம். ஆனால் உங்களுக்கு நீங்களே கிச்சு கிச்சு மூட்டிக் கொள்ள முடியாது என்பது விநோதமாக இருக்கிறதா… இது போன்ற பல விநோதங்களின் தாய்தான் இயற்கை…. அதை சில நேரம் கடவுள் என்றும் சொல்கிறோம்.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed