நான் நல்லா அழுவுறேனா இல்லை அவ நல்லா அழுவுறாளா என்கிற போட்டி ஏதாவது அக்ஷரா மற்றும் பாவனி இடையே நிலவுகிறதா? என்கிற சந்தேகமே பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மீடியா துறையில் பல சவால்களை துணிச்சலோடு பெண்கள் சாதித்து வரும் நிலையில், தொடர்ந்து அவர்களை அழ வைத்தே ஷோ நடத்தி வருகின்றனர் என்கிற குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்து வருகின்றனர்.
அழகிகளாக பார்க்கப்படும் அக்ஷரா மற்றும் பாவனி இப்படி தினமும் ஏன் அழறாங்க அதுக்கு ஏதாவது டைட்டில் கொடுக்கப் போறாங்களா? என்று நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
எந்தவொரு சின்ன விஷயமாக இருந்தாலும் ஒரு ஓரமாக போய் நின்றுக் கொண்டு அழுவதையே பிக் பாஸ் வீட்டில் வந்து 32 நாட்கள் ஆகியும் அக்ஷரா செய்து வருகிறார் என்றும் எந்தவொரு டாஸ்க்கிலும் சக போட்டியாளர்களுடனும் இன்வால்வ்மென்ட்டே இல்லாமல் இருக்கிறார் என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
அக்ஷரா போல இவர் இல்லை மற்றவர்களை விளாச இறங்கி விளையாடும் இவர் தன்னை யாராவது ஏதாவது சொல்லி விட்டால் உடனடியாக சுருதி, மதுமிதா சூழ ஒப்பாரி வைத்து வருகிறார். தொடர்ந்து இவர்கள் இருவரும் அழுது புலம்பி வருவது ரசிகர்களை இரிடேட் செய்துள்ளது.
கடந்த சீசன்களிலும் பல பிக் பாஸ் போட்டியாளர்களை அழ வைத்து டி.ஆர்.பியை எகிற வைத்ததை பார்த்து இருக்கிறோம். ஆனால், அவர்கள் தனியாக கன்ஃபெஷன் ரூமிற்கு சென்று தான் அந்த அழுகை பர்ஃபார்மன்ஸை செய்வார்கள். ஆனால், இந்த சீசனில் அக்ஷரா மற்றும் பாவனி நடிகையர் திலகம் போல எத்தனை சொட்டு கண்ணீர் வேண்டுமோ அத்தனை சொட்டு விட்டு செம ஸ்கோர் செய்து வருகின்றனர்.
அக்ஷரா மற்றும் பாவனிக்கு தான் இந்த சீசனில் ஏகப்பட்ட ரசிகர்கள் தொடர்ந்து சப்போர்ட் செய்து வருகின்றனர். அதற்கு காரணமும் அவர்களின் இந்த தொடர் அழுகாச்சி டிராமா தான் என்றும் அப்பாவி பெண்களை காயப்படுத்துறாங்க என சிம்பதி நாடகத்தை நடத்தி ரசிகர்களின் ஓட்டுக்களை சம்பாதித்து வருகின்றனர் என்கிற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
பிக் பாஸ் வீட்டில் இப்படி இருவரும் போட்டி போட்டு அழறாங்களே.. அதற்கு ஏதாவது தனி பிரிவின் கீழ் கிராண்ட் ஃபினாலேவில் டைட்டில் கொடுக்கப் போகிறாரா பிக் பாஸ் என்கிற கேள்வியையும் எழுப்பி பங்கமாக கலாய்த்து வருகின்றனர். துணிச்சலாக எந்தவொரு சூழ்நிலையையும் சந்தித்து செம போல்டாக எதிர்த்து பேசி சரியான நிலைப்பாட்டுடன் விளையாடினால் நிச்சயம் இவர்கள் இருவரும் ஃபைனல்ஸ்க்கு செல்லவும் வாய்ப்புகள் உள்ளன.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.