பிரபல பாடகரான கே.கே. மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழிந்த சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் புகழ்பெற்ற பாடகராக இருப்பவர் கே.கே என்கிற கிருஷ்ணகுமார் குன்னத். டெல்லியை பூர்வீகமாக கொண்ட இவர், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
தனது காந்த குரலால் இனிமையான பாடல்களை பாடி இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்களை வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபுதேவாவின் ‘மின்சார கனவு’ படத்தில் இடம்பெற்ற ஸ்ட்ராபெரி கண்ணே பாடலை பாடி பிரபலமானார். அதன்பிறகு ‘காக்க காக்க’ படத்தில் உயிரின் உயிரே, ‘அந்தியன்’ படத்தில் அண்டங்காக்கா கொண்டக்காரி உள்ளிட்ட புகழ்பெற்ற பல பாடல்களை இவர் பாடியுள்ளார். அதோடு கில்லி, மன்மதன், 7 ஜி ரெயின்போ காலனி உள்ளிட்ட படங்களிலும் பாடல்களை பாடியுள்ளார்.
இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாடல் பாடிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 53 வயதாகும் கேகேவின் திடீர் மரணம் இசையுலகில் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.