16.7 C
Hatton
Tuesday, April 13, 2021
spot_img
spot_img
spot_img

இதையும் படிங்க

ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுக்கு இது தான் ஒரே வழி! முக்கிய தகவல்

ஐ.பி.எல். வீரர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதுதான் கொரோனாவில் இருந்து தப்பிக்க ஒரே வழி என்று ராஜீவ்சுக்லா தெரிவித்துள்ளார்.

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 9ம் திகதி முதல் மே 30ம் திகதி வரை சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஆமதாபாத், பெங்களூர் ஆகிய நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த போட்டிக்காக 8 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. ஆனால் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் இந்த போட்டிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மும்பையில் ஐ.பி.எல். போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கொரோனாவால் இதுவரை 3 வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா அணியைச் சேர்ந்த நிதிஷ்ராணா, டெல்லி வீரர் அக்‌ஷர்படேல், பெங்களூர் அணியின் படிக்கல் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது.

இது குறித்து பேசிய கிரிக்கெட் வாரியம் துணைத்தலைவர் ராஜீவ்சுக்லா கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை பார்த்தால் பாதிப்பில் இருந்து வீரர்களை காக்க அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தான் ஒரே வழி என்று நினைக்கிறேன்.

வீரர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட மாட்டாது என்று கிரிக்கெட் வாரியம் சிந்தித்தாலும் தற்போது தடுப்பூசி தேவை என நினைக்கிறது.

கொரோனா வைரஸ் பரவல் எப்போது முடிவுக்கு வரும் என்று யாருக்கும் தெரியாது. அதற்கு காலக்கெடுவும் வழங்க முடியாது. கொரோனா அச்சத்தை வைத்துக் கொண்டு வீரர்கள் சுதந்திரமாக விளையாட முடியாது.

எனவே ஐ.பி.எல். தொட ரில் பங்கேற்கும் வீரர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்