16.7 C
Hatton
Tuesday, April 13, 2021
spot_img
spot_img
spot_img

இதையும் படிங்க

காதல் ஆசையால் குழந்தை பெற்றெடுத்த சிறுமி! பலாத்காரம் செய்த இளைஞன் ஓட்டம்..

பஞ்சாப் மாநிலம் சண்டிகர் அடுத்து உள்ள ஹோஷியார்பூர் மாவட்டத்தில் 15 வயதான சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அந்த சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார்.

சிறுமியின் வீட்டின் அருகே வட மாநிலத்தைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளியான 25 வயதான இளைஞர் ஒருவர், தனியாக வீடு எடுத்துத் தங்கி, அந்த பகுதியில் வேலை பார்த்து வந்தார்.

அப்போது, குறிப்பிட்ட அந்த 15 வயது சிறுமியுடன் அவர் முதலில் நட்பு முறையில் பேசி பழகி இருக்கிறார். இதனையடுத்து, அந்த சிறுமியிடம் பேச்சு கொடுத்து, தனது காதல் வலையில் அந்த வட மாநில இளைஞர் வீழ்த்தியிருக்கிறார்.

அத்துடன், அந்த சிறுமியிடம், “விரைவில் உன்னை நான் திருமணம் செய்துகொள்கிறேன்” என்று, வாக்குறுதியும் நம்பிக்கையும் அவன் அளித்திருக்கிறான்.

இதனை நம்பிய அந்த 15 வயது சிறுமி, அந்த 25 வயது காதலன் சொல்லும் படியெல்லாம் நடந்துகொண்டுள்ளார்.

வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட அந்த வட மாநில இளைஞன், அந்த சிறுமியை அடிக்கடி தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று, அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

பல முறை அந்த சிறுமியை அவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதன் காரணமாக, அந்த சிறுமி கர்ப்பமானார். தொடக்கத்தில், தனது கர்ப்பம் பற்றி சிறுமிக்கே தெரியாமல் இருந்து வந்த நிலையில் லேட்டாகதான் சிறுமிக்கு தெரிய வந்தது.

இதனால், தொடக்கத்தில் சற்று அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, தனது கர்ப்பம் குறித்து தனது காதலனிடம் கூறியிருக்கிறார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞன், அந்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி, அந்த சிறுமியிடம் சண்டை போட்டுள்ளான். இதனையடுத்து, அன்று இரவே தனது சொந்த மாநிலத்திற்கு அவன் ஓடி விட்டதாகத் தெரிகிறது.

அதே நேரத்தில், அந்த சிறுமியின் கர்ப்பம், கலைக்க முடியாத அளவிற்குப் பெரிதாக வளர்ந்து உள்ளது. இதன் காரணமாக, அந்த சிறுமி, கடந்த மாதம் 22 ஆம் திகதி அன்று குழந்தை பெற்றெடுத்தார்.

இதனையடுத்து, மருத்துவமனை தரப்பில் இருந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டன. அத்துடன், சிறுமியின் தந்தையும், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான இருந்த இளைஞரை தேடி அதிரடியாக தற்போது கைது செய்துள்ளனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்