குழந்தை ஒளிந்திருப்பது தெரியாமல் இயக்கப்பட்ட வாஷிங் மெஷின் ஒன்றிற்குள் குழந்தை ஒன்று படுகாயமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்தில், கிறைஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், ஐந்து வயதுக்கு கீழ் உள்ள அந்த குழந்தை வாஷிங் மெஷின் ஒன்றிற்குள் மறைந்திருந்திருக்கிறது.
அது தெரியாமல் குடும்ப உறுப்பினர் ஒருவர் வாஷிங் மெஷினை இயக்க, பின்னர் படுகாயமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை இறந்துபோனது. இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த குழந்தை யார், அதன் உண்மையான வயது என்ன, வாஷிங் மெஷினை இயக்கியது யார் என்பது போன்ற எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.