16.7 C
Hatton
Tuesday, April 13, 2021
spot_img
spot_img
spot_img

இதையும் படிங்க

கேம் விளையாட அலைபேசியை கொடுக்காததால் யாழ். பாடசாலை மாணவன் தற்கொலை

அலைபேசியில் தொடர்ச்சியாக ஒன்லைன் கேம் விளையாடிய பாடசாலை மாணவன் ஒருவன் தாயார் அலைபேசியைப் பறித்தமையால் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

இந்தச் சம்பவம், சுழிபுரம் – பிளவத்தைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பண்ணாகம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் தரம் 9இல் கல்வி கற்கும் 14 வயது மாணவனே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாகக் அலைதொலைபேசியில் விளையாட்டில் ஈடுபட்டு வந்தமையால் மாணவனின் தாயார் அலைதொலைபேசியைப் பறித்து வைத்துள்ளார்.

அதனைப் பொறுக்க முடியாத மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்